அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) தேசியக் குழுஏழை, எளிய, மக்களின் பசிப்பிணியை போக்கும் “FAIRA
![]()
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) தேசியக் குழு சார்பில், கொரோனா காலத்தில், சென்னையில் சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் ஏழை, எளிய, மக்களின் பசிப்பிணியை போக்கும் “FAIRA மதிய உணவு வழங்கும் திட்டத்தின் மூலம் 25-ஆம் நாள் உணவு வழங்கும் நிறைவு நிகழ்ச்சி. இன்று மீனம்பாக்கம் கருமாரியம்மன் கோயில் தெரு, குளத்துமேடு குடிசை பகுதி மக்களுக்கு FAIRA நிறுவனர் – தேசிய தலைவர் ஆ.ஹென்றி அவர்களின் தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளர் V.முத்து அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு தா.மோ.அன்பரசன் ஊரக தொழிற்துறை அமைச்சர்- கலந்துகொண்டு 500 நபருக்கு முகக் கவசம் மற்றும் பிரியாணி வழங்கி கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் இந்நிகழ்ச்சியில் FAIRA தேசியக் குழு பொறுப்பாளர்கள் சந்திரசேகர், ராஜசேகர், ஜெயச்சந்திரன், ஜவஹர், பிரசன்ன குமார், செல்வம், தமிழரசன், கண்ணன், கார்த்திக், பொன்குமார், மொய்தீன், ஆற்காடு தம் பிரியாணி ரமேஷ், மாரி, ரேஸ் கார்த்திக், பிரபாகர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
