தகுதித் தேர்வினை நடத்த அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது
திருவண்ணாமலை. ஜூன்.10.
தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தங்கராஜ் திருவண்ணாமலைக்கு வருகை தந்தார் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் பேட்டியில் கூறியதாவது.
தமிழகம் முழுவதும் சுமார் 149 அரசு கலைக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரியில் 5500 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தற்காலிக தொகுப்பு ஊதியமாக மாதம்
ரூபாய்.20,000 வழங்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் தமிழகத்தில் 27 பல்கலைக்கழக கழகங்கள் உள்ளது. இதில் 12 பல்கலைக்கழகத்திற்கு மட்டுமே யுஜிசி நிதி உதவி அளித்து வருகிறது. அதில் ஒரு பல்கலைக்கழகமான அண்ணாமலை பல்கலைக்கழகமும் விளங்குகிறது. ஆரம்ப காலகட்டத்தில் அதிகமான கல்விசேவையை வழங்கிய பல்கலைக்கழகம் என்பதில் மாற்று கருத்து இல்லை ஆனால் காலப்போக்கில் இது எல்லாம் முறைகேடான நிர்வாகத்தால் மாறிவிட்டது . இந்த பல்கலைக்கழகத்தில் பண செல்வாக்கு அடிப்படையில் உரிய தகுதி இல்லாமல் இட ஒதுக்கீடு பின்பற்றாமல், முறையான அறிவிப்பு வெளியிடாமல் தமக்கு வேண்டிய நபர்களை தமக்கு வேண்டிய பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் ஆசிரியரல்ல
பணியாளர்களை சேர்ந்துள்ளனர். முறைகேடாக நியமனம் செய்யப்பட்டதை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் அளிக்கப்பட்ட பதில் உறுதிப்படுத்துகின்றது. மல்லாது பல்கலைக்கழகத்தின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் ஒரு சில நல்ல ஆசிரியரை தவிர்த்து பெரும்பாலனவர்கள் கிராஸ் மேஜர் படிப்பு படித்தவர்கள், தொலைதூர வழியில் கல்வி படித்தவர்கள் முறையான கல்வி பயிலாமல் பணி வாய்ப்பினை அடைந்தவர்களே அதிகமாக உள்ளனர். இவையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அந்தப் பல்கலைக்கழகத்தின் முக்கிய அதிகாரியிடம் பேச்சுவார்த்தை உடன்படிக்கையை ஏற்படுத்தி கையகப்படுத்தி அங்கு பணியாற்றக்கூடிய உபரி பணியாளர்களுக்கு முந்தைய அதிமுக தலைமையிலான தமிழக அரசானது தனியாக நிதியை ஒதுக்கி தந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது வருடா வருடம் தமிழக அரசு பணிநிரவல் என்ற பெயரில் அண்ணாமலை பல்கலைக்கழக உபரி பணியாளர்களிடத்தில் லஞ்சம் பெற்றுக் கொண்டு அரசு கல்லூரிகளில் நிரப்பி உள்ளது. இதனால் இளம் தலைமுறை பட்டதாரிகளுக்கும், தனியார் கல்லூரி 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் உதவி பேராசிரியர்களுக்கும் அரசுக் கல்லூரிகளில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்குமான நிரந்தர பேராசிரியராகும் கனவு தவிடுபொடியாகியுள்ளது. தமிழகத்தில் இருக்கும் இருக்கின்ற மொத்த பல்கலைக் கழக ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையை விட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும். ஆனாலும்கூட இந்த மிகப்பெரிய
பெரும் துரோகத்தை ஏற்படுத்திய பல்கலைக்கழக அதிகாரிகள் ஒருவர்கூட தண்டனைக்கு உள்ளாக வில்லை. அவ்வளவு கனகச்சிதமாக இதற்கு முந்தைய அதிமுக அரசு அவர்களை காப்பாற்றி உள்ளது அதற்கான பணிகளை உயர்கல்வித்துறை அதிகாரிகள் திட்டம் தீட்டி கொடுத்துள்ளார்கள்.
இதற்கு பின்னால் கோடிக்கணக்கில் பணம் புரண்டு உள்ளது. அதாவது பணிநிரவலில் அரசு கல்லூரிக்கு அனுப்பப்பட்டவர்களில் பலர் தொலைநிலை கல்வியில் விண்ணப்பம் விநியோகம் செய்தவர்கள் பொறியியல் படித்தவர்கள் எம்பிஏ எம்சிஏ தொலைநிலைக் கல்வியில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் பலர் தற்போது அரசு கல்லூரியில் கணினி அறிவியல் ஆசிரியராக பணி ஏற்றுள்ளனர். கல்விச் சான்று போலியானது, கல்வித்தகுதி தவறானது என சுட்டிக்காட்டப்பட்ட பேராசிரியர்களுக்கு கூட லட்சக்கணக்கில் முந்தைய அதிமுக அரசு சம்பளம் வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது இவை அனைத்திற்குமான ஆதாரம் உள்ளது. ஆனால் முறையான கல்வித் தகுதியுடன் அரசு கல்லூரியில் பணியாற்றுபவர்களுக்கு ரூ.15000, ரூ20000 என வழங்கி வருகிறது. இது போன்ற பல்வேறு முறைகேடுகளை நடத்திய பல்கலைக்கழகத்திற்கு கல்லூரி பேராசிரியர்களுக்கான செட் தகுதித் தேர்வினை நடத்தும் அனுமதியை எப்பொழுதும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கக்கூடாது. அதுமட்டுமல்லாது ஏற்கனவே அன்னை தெரசா பல்கலைக்கழகம் நடத்திய 2017 செட் தேர்வில் ஏராளமான தேர்வர்கள் 2 லட்சம் முதல் 4லட்சம் வரை பணம் கொடுத்து சான்றிதழ் வாங்கி உள்ளனர். அவர்களில் பெரும்பாலனவர்கள் கல்லூரிகளில் பணியாற்றி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு உறுதுணையாக பல்கலைக்கழக முக்கிய அதிகாரிகள் கல்லூரி முதல்வர்கள் பணம் வாங்கி கொடுக்கும் புரோக்கர்களாக உள்ளனர். அந்தப் பல்கலைக் கழகம் நடத்திய செட் தேர்விலேயே நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி நிற்கிறது. அதன் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் கேட்டுக்கொள்கின்றோம் தேவைப்படும் ஆதாரங்களை சிபிஐ விசாரணையின்போது தெரிவிக்கவும் உள்ளோம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முறைகேடாக பணியமர்த்தம் செய்யப்பட்டவர்களின் வருகையில் பிபிஏ,கணினி உள்ளிட்ட பல பாடப்பிரிவில் அரசு காலி பணியிடங்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் அண்ணாமலை பல்கலைக் கழக பணி நிரவல் மட்டும் பணியில் சேர்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அவர்களின் கல்வித் தகுதியையும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க சிபிஐ விசாரணைக்கு புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள இந்த தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும். இந்த நிலையில் இது போன்ற முறைகேட்டிற்குள்ளான பல்கலைக்கழகத்திறன் மீது வழக்குப் பதிவு பதியப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள சமயத்தில் இதுபோன்று 2021 செட் தகுதித் தேர்வு நடத்த அனுமதியை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கினால் தேர்வு எழுத உள்ள விண்ணப்பதாரர்களுக்கு அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும். அந்தப் பல்கலைக்கழகம் தகுதி இல்லாமல் உள்ள அண்ணாமலை மிக பணியாளர்களை காப்பாற்றவே முயற்சி செய்யும். பணம் வாங்கிக் கொண்டு தகுதியில்லாமல் பணியாற்றும் அண்ணாமலை மிகை பணியாளர்களுக்கு மட்டும் செட் தகுதிச்சான்று வழங்க வாய்ப்புள்ளதாக என நாங்கள் கருதுகிறோம். அதனால் பல்கலைக்கழக மானியக் குழுவும் ,தமிழக அரசும் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் நேர்பட தன்மையுடன் தேர்வினை நடத்தும் பல்கலைக்கழகத்திற்கு அல்லது ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுமதி தர வேண்டும் என்றார்