*முதலமைச்சரின் ட்ரைலர் தான் தற்போது மெயின் பிச்சரை இனி பார்ப்பீர்கள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு*
சென்னை வடபழனி கோயிலுக்கு சொந்தமான, கருணாநிதி தெரு, காந்திநகர், சாலிகிராமத்திலுள்ள
250 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்பு பணி, , இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் முன்னிலையில் நடைபெற்றது இதில் தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி,
விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
*அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு*
தமிழ்நாடு முதல்வர் ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதம் ஆன நிலையில் சிதிலமடைந்த துறைகளை சீரமைக்கும் பணிகளில் ஒன்றாக வடபழனி கோவில் நிலம் காந்திநகர் கருணாநிதி தெருவில் ஆக்கிரமித்து பார்க்கிங் மூலம் பல லட்சம் ரூபாய் சம்பாதிதுள்ளனர். இதனை சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாநிதி , பிரபாகர் ராஜா ஆகியோர் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றனர் அதன் தொடர்ச்சியாக தற்பொழுது இவ்விடத்தினை இந்து சமய அறநிலையத்துறை இன்று முதல் எடுத்துக்கொண்டுள்ளோம் இன்னும் 24மணி நேரம் இவர்களுக்கு கொடுத்துள்ளோம் காலி செய்ய.
செய்த தவறுகளை முன்பிருந்தவர்கள் திருத்திக்கொண்டால் நாங்கள் நடவடிக்கைகள் எடுக்கபோவதில்லை ஆனால் அரசுக்கு வரும் வருவாயை தடுக்கும்பட்சத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதுவரை சல்லி காசுக்கூட அறநிலைத்துறைக்கு வந்ததில்ல..இங்கு உள்ள விடுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதால் மூடிவிட்டதாக கூறுகிறார்கள் விரைவில் இது பயன்பாட்டிற்கு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்
இது ட்ரைலர் தான் மெயின் பிச்சரை இனி பார்ப்பீர்கள்
போக போக தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை.. திருக்கோவில் வருமானத்திற்கு தடையாக உள்ளதை தடுத்து திருக்கோவிலுக்கு வருமானம் கிடைக்கும்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதன் அடிப்படையில் இதுவரை எத்தனை பேர் அவ்வாறு ஆகியுள்ளனர்..
பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் தற்பொழுது கைப்பற்றப்பட்ட இடத்தை மாற்றுவோம் இதனை விரைவில் முதல்வர் அறிவிப்பார்கள்
இதற்கெல்லாம் 100நாட்களுக்கு முதல்வர் தன் நடவடிக்கைகள் மூலம் பதிலளிப்பார்..
15ஆண்டுகள் ஒரே இடத்தில் குடியிருந்தால் அவர்களுக்கு அதனை வாடகைக்கு அவர்களுக்கே கொடுக்கப்படும் அதனை அறநிலையத்துறையே
யாரையும் எவ்விதத்திலும் குறைச்சொல்லவில்லை.நடந்தவற்றை கூற ஆரம்பித்தால் நாட்கள் போதாது அதனை செய்யவில்லை நாங்கள் பாஜக தங்களை நிலைநிறுத்திக்கொள்ள இவ்வாறு பேசலாம்..
தவறு எங்கு நடைபெற்றாலும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றால் யாராக இருந்தாலும் நிச்சயம் எடுக்கப்படும்..
ஜக்கி வாசுதேவ் கூட அன்னதான திட்டத்தை பாராடியுள்ளார் தூற்றுபவர்களும் பாராட்டும் அரசாக உள்ளது .
கோவில்களில் தமிழில் அரச்சனை செய்யப்படும் என பலகைகள் உள்ளதே ஆனால் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை நடைபெறுகிறதே என்ற கேள்விக்கு
கோவில்களை கண்காணித்து தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்