வேளாண் விரோத மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மத்திய மோடி அரசின் வேளாண் விரோத மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. போராட்டத்தின் முடிவில் சட்ட நகல்கள் எரிக்கப்பட்டது போராட்டத்திற்கு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட துணை அமைப்பாளர் தோழர் விமல்ராஜ் தலைமை தாங்கினார் மற்றொரு மாவட்ட துணை அமைப்பாளர் தோழர் ராஜ்குமார் ஒன்றிய அமைப்பாளர் தோழர் சுரேந்தர் தோழர் பாண்டியன் தோழர் ரவீந்திரன் மற்றும் தினகரன் விஜய் கஜேந்திரன் ஒன்றிய துணை அமைப்பாளர் மகாராஜா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தின் தோழர்கள் கலந்து கொண்டனர்.