சேவாலயா தொண்டு நிறுவனம் வாயிலாக கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி பொருட்கள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்
![]()
சேவாலயா தொண்டு நிறுவனம் வாயிலாக கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி பொருட்கள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :
திருவள்ளூர் ஜூன் 05 : திருவள்ளூர் அடுத்த கசுவா கிராமம் சேவாலயா தொண்டு நிறுவனம் வாயிலாக ரூ.4,36,686 மதிப்பில் திருவள்ளுர் மாவட்டத்தில் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 113 குடும்பங்களுக்கு ரூ.2000 மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் திருவள்ளுர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் தஞ்சாவூர் தென்காசி ஊட்டி மற்றும் பாண்டிச்சேரியில் பணியாற்றும் முன் களப் பணியாளர்களுக்கு தலா ரூ.550 மதிப்புள்ள தற்காப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டார். சேவாலயா முரளிதரன் வரவேற்புரையும் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி தலைமையுரையும் திருவள்ளூர் ஒன்றிய செயலாளர் புஜ்ஜி டி. ராமகிருஷ்ணன் திருவள்ளுர் ஒன்றிய கவுன்சிலர், புலியூர் சங்கீதாராஜீ ஊராட்சி மன்ற தலைவர், புலியூர் ஏ.குட்டி( எ) பக்தவத்சலு திருவள்ளூர் ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் மற்றும் திருவள்ளுர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் எம்.பர்கத்துல்லாகான் ஆகியோர்கள் வாழ்த்துரையும் வழங்கினர்.
சிறப்பு விருந்தினர் பேசுகையில் முன்களப் பணியாளர்கள் சேவை பாராட்டுக்குரியது. சபர்மதி ஆசிரமத்தில் காந்திஜி தன்னைத்தானே வருத்தி இரவு பகல் பாராமல் சேவை செய்தது போலவே சேவாலயா முரளிதரன் மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளார். தக்க சமயத்தில் முல்லைக்கு தேர் கொடுத்து உதவியது போலவே சேவாலயா நிறுவனம் இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏழை எளியவர்களுக்கு உதவி வருகிறது. இந்த ஆட்சியில் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனதெரிவித்தார்.
பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி பேசுகையில் சேவாலயாவின் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்களையும் சேவாலயாவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியின்போது கடையத்தில் பாரதி செல்லம்மாள் சிலை திறப்பு விழா குறித்து சிறப்பு விருந்தினர் முன்பு கோரிக்கை வைக்கப்பட்டது. சேவாலயாவின் மருத்துவ ஊர்தியை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்பெறும் நோக்கில் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் சேவாலயா இலவச மருத்துவ ஊர்தியை துவங்கிவைத்தார்.
சேவாலயா துணைத் தலைவர் செயல்பாடுகள் ஆ.ஆ.கிங்ஸ்டன் நன்றியுரை வழங்கினார்.
