ஒட்டன்சத்திரம் தனிப்பிரிவு காவலர் பிரேம்குமார் பிறந்தநாளை முன்னிட்டு மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பினை டி.எஸ்.பி. அசோகன் தலைமையில் வழங்கினார்.
பழனி கீரனூர் சன்மார்க்க குருகுல ஆதரவற்றோர் இல்லத்திற்கு ஒட்டன்சத்திரம் தனிப்பிரிவு காவலர் பிரேம்குமார் பிறந்தநாளை முன்னிட்டு மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பினை டி.எஸ்.பி. அசோகன் தலைமையில் வழங்கினார்.
பழனி கீரனூர் பேரூராட்சி சன்மார்க்க குருகுல ஆதரவற்றோர் இல்லத்திற்கு
ஒட்டன்சத்திரம் தனிப்பிரிவு காவலர் பிரேம்குமார் பிறந்த நாளை முன்னிட்டு மளிகைப் பொருட்கள் கொண்ட தொகுப்பினை இலவசமாக வழங்கப்பட்டது.இங்கு சிறியவர் பெரியவர் என100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி பருப்பு என்ணை காய்கறிகள் போன்ற ரூபாய் 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் ஒட்டன்சத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா வின் இரண்டாம் அலை பெருதொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்துவரும்
இச்சூழலில் ஆதரவற்ற சிறுவர்களும் முதியவர்களும் பசியாறும் வகையில் சமூகஅக்கறை கொண்டு இலவச அரிசி பருப்பு மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பினை இலவசமாக வழங்கியுள்ளார் மேலும் அந்த சன்மார்க்க குருகுல ஆதரவற்றோர் இல்லத்தில்வசித்து வரும் ஆதரவற்ற சிறுவர்களும் முதியவர்களும் ஒட்டன்சத்திரம் தனிப்பிரிவு காவலர் பிரேம்குமார் அவர்களின் குடும்பத்தார்களும் காவல்துணை கண்காணிப்பாளர் அசோகன் குடும்பத்தார்களும் நலம் வாழ இறைவனிடம் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.