Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை ஜூன் 4, 2021] சென்னை
Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை ஜூன் 4, 2021] சென்னை:
பிலவ வருடம் வைகாசி 21ஆம் தேதி ஜூன் 4,2021 வெள்ளிக்கிழமை. தசமி திதி மறுநாள் விடிகாலை 04.08 மணிவரை அதன் பின் ஏகாதசி திதி. உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 08.47 மணி வரை அதன்பின் ரேவதி. இன்றைய தினம் சந்திரன் மீன ராசியில் பயணம் செய்கிறார். சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.
மேஷம்
சந்திரன் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் காரியங்களில் சில தடைகள் ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் மட்டுமே வெற்றி காண முடியும். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். ராசி நாதன் செவ்வாய் மீது சனி பார்வை விழுவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ராசியான நிறம் சிவப்பு ராசியான எண் 5. மனவருத்தத்தில் அதிமுக தொண்டர்கள்.. புரிகிறது…விரைவில் சந்திக்கிறேன்.. சசிகலாவின் 5வது ஆடியோ ரிலீஸ்
ரிஷபம்
சந்திரன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் இன்று உங்களுக்கு வியாபாரத்தில் எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்டம் தேடி வரும் நாள். பயணங்களைத் தவிர்த்து விடவும். ராசியான நிறம் பச்சை, ராசியான எண் 9. திருமணப்பொருத்தம் – மகிழ்ச்சியான மண வாழ்க்கை, பிரிந்த தம்பதியர் ஒன்று சேர என்ன பரிகாரம்
மிதுனம் சந்திரன் இன்று பத்தாம் வீட்டில் பயணம் செய்வதால் வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை. உங்களுடைய வீட்டில் மங்கள காரியங்கள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவார்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். ராசியான நிறம் இளம் பச்சை,ராசியான எண் 7. ஜூன் மாத ராசி பலன் 2021 : இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் திருப்பங்கள் நிறைந்த மாதம்
கடகம்
சந்திரன் இன்றைய தினம் ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். பணவரவு நன்றாக இருக்கும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 3. சிம்மம் சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். சோம்பேறித்தனம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம் தவிர்க்கவும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். ராசியான நிறம் பச்சை, ராசியான எண் 1.
கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். இன்று வீட்டில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு வெளியூரில் இருந்து நல்ல செய்தி தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். ராசியான நிறம் இளம் பச்சை, ராசியான எண் 5.
துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை அமோகமாக இருக்கும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழிலில் பணியாட்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபங்களை அடைவீர்கள். உறவினர்கள் வழியிலும் அனுகூலம் உண்டாகும். ராசியான நிறம் வயலட், ராசியான எண் 9.
விருச்சிகம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் உங்களின் பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். சுபகாரிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உறவினர்கள் உதவியால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் தவிர்த்து விடவும். ராசியான நிறம் நீலம், ராசியான எண் 6.
தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத திடீர் விரயங்கள் ஏற்படலாம். மன நிம்மதி குறையும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். ராசியான நிறம் மஞ்சள், ராசியான
மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். கடன் பிரச்சினைகள் தீரும். வங்கி சேமிப்பு உயரும். ராசியான நிறம் நீலம் ராசியான எண் 8. சிவப்பு, ராசியான எண் 3.
கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி அடைய உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும். ராசியான நிறம் இளம் சிவப்பு, ராசியான எண் 7.
மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிட்டும். சுபகாரியங்கள் கைகூடி வரும். ராசியான நிறம் பச்சை, ராசியான எண் 3.