Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன் வியாழக்கிழமை ஜூன் 3, 2021 சென்னை:

Loading

Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன் வியாழக்கிழமை ஜூன் 3, 2021 சென்னை:

பிலவ வருடம் வைகாசி 03ஆம் தேதி ஜூன் 3,2021 வியாழக்கிழமை. நவமி திதி இரவு 02.22 மணிவரை அதன் பின் தசமி திதி. பூரட்டாதி மாலை 06.34 மணி வரை அதன்பின் உத்திரட்டாதி. சந்திரன் இன்றைய தினம் கும்ப ராசியிலும் மீன ராசியிலும் பயணம் செய்கின்றனர். கடக ராசிக்காரர்களுக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. குரு பகவான் ஆசி நிறைந்த இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் என்று பார்க்கலாம்.

மேஷம்
ராசிக்கு லாப ஸ்தானத்திலும் 12ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்வதால் பண வரவும் சுப விரைய செலவுகள் ஏற்படும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கோபமான பேச்சுக்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். புதிய வேலை கிடைப்பதற்கான நேரம் கூடி வருகிறது. ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 9 தீக்குளிக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்தேன்மா.. உடைந்து அழுத அதிமுகவின் ராஜாரகுபதி.. பதறிய சசிகலா!
ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் 10ஆம் வீட்டில் இருந்து லாப ஸ்தானமான பதினொன்றாவது வீட்டிற்கு பயணம் செய்கிறார். குரு பகவான் உங்கள் குடும்ப, தன ஸ்தானத்தைப் பார்ப்பதாலும் தாராள தனவரவுகள், நல்ல வாய்ப்புகள் இன்று தேடி வரும். இன்றைய தினம் நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். ராசியான நிறம் பச்சை, ராசியான எண் 6. திருமணப்பொருத்தம் – மகிழ்ச்சியான மண வாழ்க்கை, பிரிந்த தம்பதியர் ஒன்று சேர என்ன பரிகாரம்

மிதுனம்
ராசிக்கு பத்தாவது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் உள்ளதால் வேலையில் கவனமும் விழிப்புணர்வும் தேவை. இன்றைக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. வீண் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கலாம். ராசியான நிறம் சிவப்பு, ராசியான எண் 4. ஜூன் மாத ராசி பலன் 2021 : இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் திருப்பங்கள் நிறைந்த மாதம்

கடகம்
உங்கள் ராசிக்கு பிற்பகல் வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. பிற்பகலுக்கு மேல் ராசிக்கு ஒன்பதாவது வீட்டில் சந்திரன் பயணம் செய்வதால் கடந்த 2 நாட்களாக இருந்த பிரச்சினை நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் உற்சாகம் பிறக்கும். கணவன் – மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடி வரும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 6.

சிம்மம்
ராசிக்கு ஏழாவது வீட்டில் பயணம் செய்யும் சந்திரன் பிற்பகலுக்கு மேல் ராசிக்கு எட்டாவது வீட்டில் சஞ்சரிப்பதால் இன்றைய தினம் மகம், பூரம் நட்சத்திரக்காரர்கள் அமைதியாக இருப்பது நல்லது. முடிந்த வரை வீண் பேச்சுகளை தவிர்ப்பதும், உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்தவும். பயணங்களைத் தவிர்த்து விடவும். நோய் தொற்றுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். இன்று ராசியான நிறம் சிவப்பு, ராசியான எண் 5.

கன்னி
இன்றைய தினம் ஆறாவது வீட்டில் இருந்து ஏழாவது வீட்டிற்கு சந்திரன் பயணம் செய்கிறார். குடும்பத்தில் குதூகலமான நாளாக அமையும். இன்றைய தினம் தாராள தனவரவுகள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன்களை அடையலாம். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 5.

துலாம்
ராசிக்கு ஆறாவது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உடனடியாக சரியாகும். செய் தொழிலில் லாபம் கிடைக்கும், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். வாங்கி வைத்திருந்த சரக்குகள் விற்றுத்தீரும். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். உங்களுடைய கடன்களை அடைப்பீர்கள். ராசியான நிறம் சிவப்பு, ராசியான எண் 7.

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார்.எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். இன்றைய தினம் வீண் செலவுகள் ஏற்படும். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்கவும். முன்னோர் சொத்துக்களை விற்கும் போது கவனம் தேவை. ராசியான நிறம் பச்சை, ராசியான எண் 8.

தனுசு
ராசிக்கு நான்காவது வீட்டில் சந்திரன் சஞ்சரிப்பதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமும் நிதானமும் தேவை. இன்றைய தினம் பணவரவுகள் சிறப்பாக இருக்கும் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வதன் மூலம் ஒற்றுமை ஏற்படும். ராசியான நிறம் சிவப்பு, ராசியான எண் 3.

மகரம்
ராசிக்கு மூன்றாவது வீட்டில் சந்திரன் சஞ்சரிப்பதால் உங்களின் தைரியம் அதிகரிக்கும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கும் திறமைகேற்ப வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். ராசியான நிறம் சிவப்பு, ராசியான எண் 3.

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் இரண்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் உங்கள் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். தாராள தனவருவாய் அதிகரிக்கும். கடந்த இரண்டு நாட்களாக இருந்த பிரச்சினைகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ராசியான நிறம் பச்சை, ராசியான எண் 6.

மீனம்
விரைய ஸ்தானத்தில் உள்ள சந்திரன் இன்று உங்கள் ராசிக்குள் சஞ்சரிப்பதால் மனக்குழப்பம் இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். கணவன் மனைவியிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவு ஏற்படும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நன்மைகள் உண்டாகும். ராசியான நிறம் இளம் மஞ்சள், ராசியான எண் 6.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *