பாலக்கோடு பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது.
தர்மபுரி மாவட்டத்தில் நகரம் மற்றும் கிராம பகுதிகளில் கொரோனா வைரஸ் 2வது அலை தீவிரமாக பரவி வருவதால் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் வெளியில் சென்று திரும்பும்போது சோப்பு, கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது.
மேலும் கொரோனா நோய் பரவல் அதிகமாக உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு 45 வயது மேற்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டது.
தற்போது 2வது தவணையாக 18 முதல் 45 வயதினகுக்கு மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவுப்படி பாலக்கோடு பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது.இதில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் கல்லூரி மாணவிகள் உட்பட ஏராளமானோர் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கண்ணன், பேருராட்சி செயல் அலுவலர் டார்த்தி, துப்புரவு மேற்பார்வையாளர் ரவீந்திரன், சுகாதார ஆய்வாளர் டாக்.தமிழ்செல்வன், செவிலியர்கர் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.