Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன் புதன்கிழமை ஜூன் 2, 2021 சென்னை:

Loading

Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன் புதன்கிழமை ஜூன் 2, 2021 சென்னை:

பிலவ வருடம் வைகாசி 18ஆம் தேதி ஜூன் 2,2021 புதன்கிழமை. அஷ்டமி திதி இரவு 01.13 மணிவரை அதன் பின் நவமி திதி. சதயம் மாலை 04.59 மணி வரை அதன்பின் பூரட்டாதி. சந்திரன் இன்று கும்ப ராசியில் குரு உடன் இணைந்து பயணம் செய்கிறார் குரு மங்கல யோகம் கூடியுள்ளது. இந்த நாளில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை பார்க்கலாம்.

கடக
ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் சந்திரன் சஞ்சாரம் லாப ஸ்தானத்தில் உள்ளது. 11ஆம் வீட்டில் குருவும் சந்திரனும் இணைந்து குரு மங்கல யோகம் கூடி வந்துள்ளது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும் சிறப்பான நாள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பும் மூத்த சகோதரரின் ஆதரவும் கிடைக்கும். நம்பிக்கைக்குரியவர்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நோய் தொற்றுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பயணங்களைத் தவிர்த்து விடவும். ராசியான நிறம் மெரூன். ராசியான எண் 7,9. கொறடா பதவிக்கு கோல் போட்டு பார்க்கும் கே.பி.முனுசாமி… அணி மாறிய கோபத்தில் ஓபிஎஸ் கோஷ்டி

ரிஷபம்
சந்திரன் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். நன்மைகள் நடைபெறும் நாள். ராசியான நிறம் இளம் மஞ்சள், ராசியான எண் 2, 5. ஜூன் மாத ராசி பலன் 2021 : இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் திருப்பங்கள் நிறைந்த மாதம்

மிதுனம்
சந்திரன் ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் உணர்ச்சிபூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். அலுவலகத்தில் ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும், அவர்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் கை கூடி வரும். ராசியான நிறம் பச்சை, ராசியான எண் 5,9. ஜூன் மாத ராசி பலன் 2021 : இந்த ராசிக்காரர்களுக்கு நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்

கடகம்
சந்திரன் இன்றைய தினம் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பெரிய அளவில் பண முதலீடுகள் செய்ய வேண்டாம் தவிர்த்து விடவும். உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். பழைய கசப்பான சம்பவங்களை எல்லாம் யாரிடமும் விவாதிக்க வேண்டாம். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது. விழிப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டிய நாள். ராசியான நிறம் இளம் சிவப்பு ராசியான எண் 2, 6

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் இன்று கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புது நட்பு மலரும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் உதவிகள் வீடு தேடி வரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். வருமானம் அதிகரிக்கும் நாள். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 1, 10

கன்னி சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் உங்களுக்குக் கிடைக்கும். சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் பயன்படுத்தி கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். நன்மைகள் அதிகம் நடைபெறும் நாள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். ராசியான நிறம் இளம் பச்சை. ராசியான எண் 3,

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் நட்பால் ஆதாயமும் உண்டாகும். புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் நாளாக அமைந்துள்ளது.

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி தேடி வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் முயற்சி செய்கிறார். இன்று வேலை விசயமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சிலர் உங்கள் உதவியைநாடுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். சமூகத்தில் மதிப்பு கூடும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். மனதில் நிம்மதியும் குடும்பத்தில் சந்தோஷமும் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். ராசியான நிறம் நீலம். ராசியான எண் 7,

கும்பம்
இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை குறைப்பது நல்லது. குரு உடன் சந்திரன் இணைந்துள்ளதால் குரு மங்கல யோகம் கூடி வந்துள்ளது. திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். திட்டமிட்ட சில காரியங்கள் முடியும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும் என்றாலும் செய்து முடித்து நல்ல பெயர் வாங்குவீர்கள். ராசியான நிறம் ப்ளூ, ராசியான எண் 8.

மீனம்
விரைய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிப்பதால் திடீர் செலவுகள் வரும். உறவினர் நண்பர்களுடன் வீண் விவாதம் வந்து போகும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். யாருக்கும் சாட்சிக் கையெழுத்து போட்டு பணம் வாங்கித் தர வேண்டாம். கவனமும் நிதானமும் தேவைப்படும் நாளாகும். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 3.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *