, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 98 வது பிறந்தநாள் வாழ்த்து

Loading

அரசு அதிகார மையத்தில் பணியாற்றும் சுமார் 6000 தலைமைச் செயலகப் பணியாளர்கள் சார்பிலும், ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் உள்ளிட்ட சுமார் 18 இலட்சம் அரசு பணியாளர் குடும்பங்கள் சார்பிலும், தென்னகத்தில் உதித்த, பகுத்தறிவு வழிவந்த ஓய்வு அறியா உதய சூரியன், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 98 வது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்வதில் தமிழ் நாடு தலைமைச் செயலகச் சங்கம் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறது.

மத்திய அரசுக்கு இணையாக மாபெரும் சலுகைகளை கொடையாக கொடுத்த மாணிக்கமே!

1998இல் தலைமைச் செயலகச் சங்கத்தின் பொன்விழா கண்ட பொதிகை தமிழே!

உயிரனைய தமிழழகு ஒளிரு முகமே, உலவுகின்ற ஒலி முழுதும் உமது குரலே!

நயமிழைய கவிமழை பொழியும் முகிலே, நாவன்மைமிகு தமிழறிஞரின் தலைமை தமிழ் கவியே!

தமிழ் நாடு அரசுப் பணியாளருக்கோர் அருமருந்தே! தன்னை நாடி வந்தோரை தாய் போல்
காத்தவரே!

கயமைதரும் பகைவருக்கும் கனிவு காட்டும் கருணைக் கடலே,
கலையழகு வளையவந்த இலக்கிய இன்பமே!

பணியாளர் கோரிக்கை கேளாமல் சென்றவரும் பலரிருக்க, பாங்குடனே எங்கள் குறை களைந்திட, 2021 இல் செயலகச் சங்கத்தின் பவளவிழா கண்டிட மாண்புமிகு தளபதியை தந்திட்ட தலைமகனே, எம் தமிழ் தலைமகனே! உமது 98 வது பிறந்த நாள் வாழ்த்து கூற வயதில்லை. வணங்குகிறோம் உம் பொன் மலரடி தொட்டு.

நீவிர் ஓர் உதயசூரியன் ஆயிற்றே, உமக்கேது மறைவு?
விழி நீரோடு கேட்கின்றோம்
அழுகின்ற தமிழ் குழந்தைகளை- உம் அன்பு கரத்தால் அரவணைக்க எங்கள் அன்புருவே…. அறிவாலயமே..
மீண்டும் உயிர்த்தெழுந்து வாருங்கள் எங்கள் உயிரோவியமான குரளோவியமே!

ஓங்குக நும் புகழ்.

கவிஞர் கோபாலபுரம் செ.பீட்டர் அந்தோணி சாமி மற்றும் நிர்வாகிகள், தமிழ் நாடு தலைமை ச் செயலகச் சங்கம், சென்னை 9.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *