281 கர்நாடக மது பாட்டில் மற்றும் பிக்கப் வாகனம் பறிமுதல்

Loading

தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி நான்கு ரோடு சோதனை சாவடியில் மாரண்டஹள்ளி போலீசார் தினந்தோறும் இரவு பகல் கொரோனா முழு நேர ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று இரவு 10.30 மணியளவில் மாரண்டஹள்ளி 4 ரோடு பகுதியில் உதவி காவல் ஆய்வாளர் ரமேஷ் பிக்கப் வாகனத்தை நிறுத்தி விசாரித்ததில் சக்கில்நத்தம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் வேடியப்பன் 34வயது.

மற்றும் அதை கிராமத்தை சேர்ந்த முத்து மகன் மாதேஸ் 36 வயது விவசாயிகள் என தெரியவந்துள்ளது. கர்னாடகவிலிருந்து பிக்கப் வாகனம் மூலம் தேக்னிகோட்டை பஞ்சப்பள்ளி வழியாக மாரண்டஅள்ளி நோக்கி வந்துள்ளது. அப்போது மாரண்டஹள்ளி நான்கு ரோட்டு பகுதியில் உதவி காவல் ஆய்வாளர் ரமேஷ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் அப்பொழுது அவ்வழியாக வந்த பிக்கப் வாகனத்தை சோதனை செய்ததில் வாகனத்தில் 281 கர்நாடகா மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து உதவி ஆய்வாளர் ரமேஷ் அவர்கள் கடத்திவரப்பட்ட 281 கர்நாடகா மதுபாட்டில்கள் மற்றும் பிக்கப் வாகனம் மாரண்டஅள்ளி காவல் நிலையத்திற்கு எடுத்து சென்று வாகனம் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்து வேடியப்பன். மாதோஸ்.ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *