திருத்தணி மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம்

Loading

திருத்தணி மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம்:

திருவள்ளூர் மே 30 : தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி மற்றும் திருவள்ளுர் சட்டமன்ற தொகுதிகளுக்கான கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் திருத்தணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் தனியார் திருமண மண்டபத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா ஆகியோர் தலைமையில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் ரூ. 200 மதிப்பிலான கோவிட் சம்மந்தமான மருந்து வைட்டமின் மாத்திரை கபசுர குடிநீர் முககவசம் கிருமிநாசினி உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் அடங்கிய 200 கோவிட் கேர் கிட்டினை தொற்று பாதித்தவர்களுக்கு வழங்குவதற்கு வட்டார மருத்துவ அலுவலர்களிடம் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன்; ஆகியோர்; வழங்கினர்.

பால்வளத்துறை அமைச்சர் கூறியதாவது :
திருவள்ளுர் நகராட்சியில் உள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கை 14237 இதில் காய்ச்சல் கணக்கெடுப்பு முடிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 11687 ஆகும் மீதமுள்ள 2555 வீடுகளின்
கணக்கெடுப்பு பணி விரைவில் முடிக்கப்படும். திருவள்ளுர் நகராட்சியில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ள தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 8274 ஆகும். 45 – 60 வயது வரை தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 814 ஆகும். மொத்தம் தடுப்பூசி போட்டவர்களின்
எண்ணிக்கை 9088 ஆகும். எனவே பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும். அனைத்து வார்டுகளுக்கும் காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் அனைத்தும் வீடு தேடி சென்று வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட வாகனங்கள் 69 ஆகும்.

திருத்தணி நகராட்சியில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ள தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 693 ஆகும். 45 – 60 வயது வரை தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 720 ஆகும். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 721. எனவே மொத்தம் உள்ள மக்கள் தொகையில் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைத்து மக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும்.

திருத்தணி நகராட்சியில் உள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கை 13207 இதில் காய்ச்சல் கணக்கெடுப்பு முடிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 13207 ஆகும். எனவே நிலுவை ஏதும் இல்லை. பீளிச்சிங் பவுடர் சுண்ணாம்பு லைசால் உள்ளிட்ட கிருமி நாசினி தேவையான அளவில் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். அனைத்து வார்டுகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் அனைத்தும் நடமாடும் வாகனங்கள் மூலம் தங்கு தடையின்றி மக்களுக்கு சென்றடைய தேவையான நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும். அனைவரும் முழு வீச்சில் பணிபுரிந்து தொற்றினை முற்றிலுமாக ஒழிப்பதற்கு ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டுமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் கூறினார்.

இந்நிகழ்ச்சிகளில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் ச.சந்திரன் திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் உதவி ஆட்சியர் (பயிற்சி) அனாமிகா ரமேஷ் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை க.லோகநாயகி மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் கோ.உமாமகேஸ்வரி இணை இயக்குநர் குடும்ப நலம் மற்றும் ஊரகநலப்பணிகள் மரு.ராணி துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.ஜவஹர்லால் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *