திருச்சி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராக ரவிச்சந்திரன் பொறுப்பேற்பு
![]()
திருச்சி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராக ரவிச்சந்திரன் பொறுப்பேற்றார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றார்.
இதைத்தொடர்ந்து தலைமைச் செயலாளர் உள்ளிட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக ஏற்கனவே இங்கு பணியாற்றிய சிவராசு மீண்டும் திருச்சி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டார். இந்த வகையில் திருச்சி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராக ரவிச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதையடுத்து ரவிச்சந்திரன் மக்கள் தொடர்பு அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய மக்கள் தொடர்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ள ரவிச்சந்திரன் ஏற்கனவே திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்தார். பின்னர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் உதவியாளராக பணிபுரிந்தார்.
சென்னை தலைமை அலுவலக காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரவிச்சந்திரன்
தற்போது மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு பெற்று திருச்சி மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
