தமிழ்நாடு பால் முகவர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு க ஸ்டாலின்அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு பால் முகவர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு க ஸ்டாலின்அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
முதல்வராக பொறுப்பேற்றவுடன்தங்கள் தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை உடனடியாக மக்கள் நலன் கருதி ஆவின் பால் விலையை 3 ரூபாய் குறைத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
மேலும் கடந்த 10 ஆண்டுகளாக ஆண்ட அதிமுக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை தங்களது ஆட்சியின் மூலம் எங்களுக்கு ஒரு விடிவு காலம் பிறந்திருக்கிறது. எங்களது பல நாள் கோரிக்கையான நல வாரியத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்..
தனியார் பால் விலையை
ஆவின் பால் விலையை குறைத்தது போன்று குறைப்பதற்கு ஆவணம் செய்ய வேண்டும்,மேலும் ஆவின் பால் முகவர்களுக்கு நேரடியாக கிடைக்க வழிவகை செய்து தர வேண்டும் என்றும் இந்த நேரத்தில் எங்களது கோரிக்கையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்..அதுமட்டுமல்லாமல் தாங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதுஇந்த போது உங்களிடம் எங்களது கோரிக்கைகளை நாங்கள் கொடுத்திருந்தோம் அப்போதே நீங்கள் பரிசீலிப்பதாக கூறியிருந்தீர்கள்.எனவே தற்பொழுது நீங்களே முதல்வராக இருக்கும்போது இருக்கும்பட்சத்தில் எங்களுக்கு அனைத்து சலுகைகளும் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகம் இல்லை.தமிழ்நாடு பால் முகவர்கள் முன்னேற்ற சங்கம் இந்த அரசுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருந்து செயல்படும் என்பதை இந்த நேரத்தில் உறுதி அளிக்கின்றோம்.