மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு, புனித ஜார்ஜ் கோட்டை,

Loading

மாண்புமிகு ஐயா,

பொருள்: தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் Covid-19 தொற்று அதிகரித்து வருதல் சில பணியாளர்களுக்கு விலக்கு அளித்தது, தலைமைச் செயலக அத்தியாவசியத் துறைகளாக அறிவிக்கை செய்தது -நன்றி தெரிவித்தல் -தொடர்பாக.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தமிழக மக்களைக் காப்பதில் அல்லும் பகலும் அயராது உழைத்துவரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்

நோய்த்தொற்றின் தாக்கத்தை அறிந்து தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் முன்வைத்த கோரிக்கையை ஏற்று தலைமைச் செயலகத் துறைகளில் அத்தியாவசிய துறைகளில் அவசியமாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டுமே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் எனவும், இணை நோய் உள்ளவர்கள் (Government employees with comorbidities, Cancer patients etc), கர்ப்பிணி பணியாளர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய பணியாளர்கள் அலுவலகம் வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது எனவும் ஆணையிட்டமைக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் அகம் மகிழ நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

S. Peter Antony Sami

தலைவர்

தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *