Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன்
Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை மே 9, 2021
சென்னை: பிலவ வருடம் சித்திரை 27 ஆம் தேதி மே 09, 2021 ஞாயிற்றுக்கிழமை. திரயோதசி திதி இரவு 07.31 மணி வரை அதன் பின் சதுர்த்தசி திதி. ரேவதி மாலை 05.28 மணி வரை அதன் பின் அசுவினி. சந்திரன் இன்றைய தினம் மீன ராசியிலும் மேஷ ராசியிலும் பயணம் செய்கிறார். சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்திலும் உங்கள் ராசியிலும் பயணம் செய்கிறார். இன்று எந்த ஒரு செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரிடமிருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
ரிஷபம்
சந்திரன் சஞ்சாரம் விரைய ஸ்தானத்திற்கு வருவதால் திடீர் செலவுகள் வரும். பண வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும்.
இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். உறவினர்களால் நன்மைகள் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும் நாள். திடீர் விரைய செலவுகள் வரும்.
மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். சகோதர சகோதரிகள் வழியில் நன்மைகள் உண்டாகும். வியாபார வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும்.
கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பணவரவு அமோகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். உடன் பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் உத்தியோகத்தில் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு எட்டாம் வீட்டில் மாலை 5.30 மணிவரை பயணம் செய்கிறார்.
உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படும். எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுப காரிய முயற்சிகளைத் தவிர்த்து விடவும்.
கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு எட்டாம் வீட்டிற்கு வருகிறார். மாலைக்கு மேல் செய்யும் செயல்களில் கவனம் தேவை. வாகன போக்குவரத்தில் நிதானம் அவசியம். இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. இரவு நேர பயணங்களைத் தவிர்த்து விடவும்.
துலாம்
சந்திரன் சாதகமான நிலையில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். தொழிலில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும்.
விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மனமகிழ்ச்சி உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி லாபம் உண்டாகும். வாங்கி வைத்த சரக்குகள் விற்று தீரும்.
தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார்.
இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். தொழிலில் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம். காரியங்களில் நிதானமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்க்கும் உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். சுப காரிய முயற்சிகளில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.
மகரம்
மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்குவதில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு சாதகமான முறையில் பயணம் செய்வதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்து விற்பனையில் லாபம் கிடைக்கும். இன்று பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகள் தொடர்பாக பேசலாம்.
மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசியிலும் இரண்டாம் வீட்டிலும் பயணம் செய்கிறார். இன்று உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் விலகும்.