Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன்
Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை மே 07, 2021 சென்னை:
பிலவ வருடம் சித்திரை 24ஆம் தேதி மே 07, 2021 வெள்ளிக்கிழமை. ஏகாதசி திதி பகல் 03.32 மணி வரை அதன் பின் துவாதசி திதி. பூரட்டாதி பகல் 12.26மணி வரை அதன் பின் உத்திரட்டாதி. சந்திரன் இன்றைய தினம் மீன ராசியில் பயணம் செய்கிறார். சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.
மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு அனுகூலம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் உணவு விசயத்தில் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணவருமானம் அதிகரிக்கும். நல்லவை அதிகம் நடைபெறும் நாள். குடும்பத்தில் பேச்சுவார்த்தை கவனம் தேவை.
ரிஷபம்
லாப ஸ்தானத்தில் சந்திரன் பயணம் செய்கிறார். ராசிக்குள் சுக்கிரன் இருப்பதால் இன்றைய தினம் பணம் வரவு அபரிமிதாக இருக்கும். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை கொடுக்கும். வங்கி சேமிப்பு உயரும். வேலையில் கவனம் தேவை.
மிதுனம்
சந்திரன் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் இருக்கிறார். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி ஏற்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்படாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வாழ்க்கைத்துணையின் உதவி உற்சாகத்தைக் கொடுக்கும்.
கடகம்
சந்திரன் பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். உடல் நலம் உங்களுக்கு அற்புதமாக இருக்கும். காதல் விவகாரங்கள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தும்.மண வாழ்க்கை மகிழ்ச்சியை தரும். கடந்த 2 நாட்களாக இருந்த பிரச்சினை முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலையில் கவனம் தேவை. தொழிலில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வேலைபளு குறையும். எதிர்பாராத உதவிகள் வீடு தேடி வரும்.
சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் நிதானத்துடன் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். மவுன விரதம் இருப்பது நல்லது. பத்தாம் வீட்டில் உள்ள சுக்கிரனால் பதவி உயர்வு தேடி வரும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வெளியூர் பயணங்களில் கவனமுடன் இருந்தால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு அற்புதமான நாள். பணவரவு தாரளமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். காலதாமதமாக முடிய கூடிய காரியங்கள் கூட எளிதில் முடியும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொன் பொருள் சேரும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். இன்று உங்களுக்கு இனிமையான நாளாக இருக்கும்.
துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். ராசிக்கு எட்டாம் வீட்டில் உள்ள சுக்கிரனால் நகை, பணத்தை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். குடும்பத்தில் உற்சாகமாக இருப்பீர்கள்.
விருச்சிகம்
ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள சந்திரனால் புத்திரர்கள் வழியில் சில பிரச்சினைகள் வரும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஏழாம் வீட்டில் உள்ள ராகு, சுக்கிரன், புதனால் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். சுக்கிரனின் பார்வை குடும்பத்தில் உற்சாகத்தை அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் கடன் சுமை ஓரளவு குறையும். மண வாழ்க்கை காதல் விவகாரங்கள் உற்சாகத்தைத் தரும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எட்டாம் வீட்டில் உள்ள செவ்வாயினால் வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை.
தனுசு
நான்காம் வீட்டில் உள்ள சந்திரனால் அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். இன்று வியாபாரத்தில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் யோசித்து செயல்பட்டால் இழப்புகளை தவிர்க்கலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். குதூகலம் உண்டாகும்.
மகரம்
இன்றைய தினம் உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் பயணம் செய்கிறார். குடும்ப ஸ்தானத்தில் குரு இருப்பதால் இன்று சுபகாரியங்கள் கைகூடி வரும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். புதிய வேலைக்கு இன்று அப்ளை செய்ய நல்ல நாள்.
கும்பம்
இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சந்திரன் இருக்கிறார். உங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும். விரைய சனியால் திடீர் செலவுகள் வரும். வருமானம் அதிகமாக இருந்தாலும் செலவுகள் வரவுக்கு மீறி இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாக சிக்கனமாக செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.
மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்குள் பயணம் செய்வதால் மனதில் இருந்த குழப்பம் நீங்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் தேடி வரும். சொத்துக்கள் வாங்குவதற்கான முயற்சிகள் வெற்றியை தரும். வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும்.