ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அங்குள்ள பணியாளர்களுக்கு தீ விபத்து குறித்து செயல் விளக்க வகுப்புகள் நடத்தப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் தீயணைப்பு மீட்புபணி நிலையத்தின் சார்பில், ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அங்குள்ள பணியாளர்களுக்கு தீ விபத்து குறித்து செயல் விளக்க வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் தீ விபத்திலிருந்து தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும், தீ விபத்து ஏற்படும்பொழுது எவ்வாறு துரிதமாக தீயை கட்டுப்படுத்த வேண்டும் என்பனவற்றை செயல் விளக்கமாக, ஆத்தூர் தீயணைப்பு மீட்புப்பணி நிலையத்தின் நிலைய அலுவலர் சேகர் அவர்கள் எடுத்துரைத்து விளக்கினார். உடன் ஆத்தூர் தீயணைப்பு மீட்புப்பணி நிலையத்தின் மீட்புப்பணி வீரர்கள் இருந்தனர்.