பள்ளி மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி பார்க்க விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியர்கள்

Loading

தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கல்வி தொடர்பாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் விவரங்கள் அடங்கிய தகவல்களை தனித்தாளில் எழுதி நகல் எடுத்துக்கொடுத்து பள்ளி ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
தமிழகம் முழுவதும் கரோனா ஊரடங்கால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஒரு ஆண்டிற்கு மேலாக விடுமுறை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்வி தொலைக்காட்சிகள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக மாணவ, மாணவிகள், பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் ஒளிபரப்பாகும் நேரங்களை தாளில் எழுதி கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறும்போது, கரோனா ஊரடங்கால் கல்வி தொலைக்காட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. மாணவ, மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் இதனை அறியும் வகையில் ஒவ்வொரு பெற்றோருக்கும் தனி,தனியாக தகவல்களுடன் கூடிய விழிப்புணர்வு நகல்கள் பெற்றோர்கள் அனைவரிடமும் வழங்கப்பட்டுள்ளது.அதில் பாடங்கள் நேரம், ஒளிபரப்பு செய்யப்படும் தொலைக்காட்சி உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன.பல பெற்றோர்கள் அலைபேசி வழியே தொடர்பு கொண்டு தொலைகாட்சி நிகழ்ச்சிகள் குறித்து சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திகொண்டு வருகின்றனர்.மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி தொலைக்காட்சியில் பாடங்களை பயின்று பதில் அளித்து வருவதாகவும் தெரிவித்தனர்.என்றார்.
படவிளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் அறிந்து கொள்ளும் வகையில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் விவரங்கள் அடங்கிய தகவல்களை தனித்தாளில் எழுதி நகல் எடுத்துக்கொடுத்து பள்ளி ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *