பாலக்கோடு மாரண்டஹள்ளி பகுதியில் சந்துகடைகளில் மதுவிற்பனை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

Loading

பாலக்கோடு. ஏப்.29-
மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட பாலக்கோடு அரசு மது கடை அருகே உள்ள சந்துகடைகளில் 24மணி நேரமும் கூடுதல் விலைக்கு மதுவிற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

மாரண்டஹள்ளி பகுதியில்

மூன்று அரசு மதுபானக்கடைகள் செயல்பட்டு வருகிறது. மேலும் அமானிமல்லாபுரம், வட்டகானம்பட்டி, 5வது மையில், கரகூர், திருமல்வாடி கூட்டு ரோடு, பெல்ரம்பட்டி, கரிகுட்டனூர், பஞ்சப்பள்ளி, ஜிட்டாண்டஹள்ளி
போன்ற பகுதியில் சந்துகடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை நடைபெற்று வருகின்றது. இப்பகுதியில் 24 மணிநேரமும் மதுபாட்டிகள் கிடைப்பதால் தினதோரும் கூலி வேலைக்கு செல்லுபவர்கள் மது அருந்தி விட்டு ரோட்டோரத்தில் விழுந்து கிடக்கும் சூழல் உள்ளது. மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அதிகாலையில் மது வாங்கி குடித்து வருகின்றனர். அதிக அளவில் பாதிக்கப்படுவதாலும்,கொரோனா நோய்தொற்று பரவி வருகிறது. இதனால் பலகுடும்பங்கள் வருமையில் சிதைந்து கிடக்கின்றது.
மேலும் இருசக்கர வாகனத்தில் செல்லுபவர்கள் மது அருந்திவிட்டு செல்லுவதால் சாலையோரம் நடந்து செல்லுபவர்கள் மீது மோதி உயிரிழப்புகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. பாலக்கோடு சாலையில் அதிக உயிரிழப்பு, படுகாயம் ஏற்பட்டு வருகின்றது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தர்மபுரியில் கொரோனா நோய்தொற்று அதிகம் பரவிவருவதால் மக்களின் நலன்கருதி சந்துகடைகளை முற்றிலும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *