தர்மபுரியில் காவல்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்திய கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்.

Loading

தர்மபுரி நான்கு ரோடு சந்திப்பில் நகர காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் கொரொனா விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது எமதர்மராஜன் சித்திரகுப்தன் வேடமணிந்த நாடக கலைஞர்கள் முகக் கவசம் அணியாமல் வாகனத்தில் வருபவர்களை நிறுத்தி முகக் கவசம் அணியாவிட்டால் எமன் தங்களை அழைத்துக் கொள்வான் என கலை நிகழ்ச்சிகள் செய்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். இதனைத்தொடர்ந்து நகரப் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சின்னசாமி மற்றும் மானதி ஆகியோர் முன்னிலையில் பிரச்சார கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தன்னார்வ தொண்டு நிறுவன நகைச்சுவை நாட்டுச்சக்கரை உரிமையாளர் சுகுமார் ராதா ஸ்டோர்ஸ் உரிமையாளர் பிரதாப் மற்றும் சந்திரமோகன் பிறைசூடன் மணிமாறன் முனிராஜ் தகடூர் வேணுகோபால் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

0Shares

Leave a Reply