சென்னை அடுத்த பல்லாவரம் நகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு ஊசி திருவிழா
செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது உள்ள புதிய 1,800 ஆக்சிஜன் படுக்கைகளில் 200 படுக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது அதனால் மாவட்டத்தில் தற்போது ஆக்சன் படுக்கைகள் தட்டுப்பாடு கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் குரோம்பேட்டை அரசு பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி திருவிழாவில் பேட்டி*
சென்னை அடுத்த பல்லாவரம் நகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு ஊசி திருவிழா நடைபெற்றது
முதல் நாளான இன்று குரோம்பேட்டையில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நகராட்சி ஆணையர் மதிவாணன் தலைமையில் நடைபெற்று வருகிறது
இதனை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், இயக்குனர் சுகாதாரத்துறை அதிகாரி, திட்ட இயக்குனர் ஆகியோர் பார்வையிட்டனர்
இந்த முகாமில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட்சீல்ட் தடுப்பூசியினை அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு செலுத்தி கொண்டு வருகின்றனர்
பின்னர் செய்தியாளரிடம் பேசிய மாவட்ட ஆட்சியர்
பல்லாவரம் ,தாம்பரம் நகராட்சி பேரூராட்சிகள் ஒட்டிய பகுதிகளில் அதுபோன்று சித்தாலப்பாக்கம் பெரும்பாக்கத்தில் இருந்து பொழிச்சலூர் ஊராட்சி பகுதிகளில் தற்போது வரை பலர் நோய் தோற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் இப்பகுதிகள அதிகமானோருக்கு செலுத்தபட்டு வருகிறார்கள்
இதை தொடர்ந்து மாநில அரசும் தேவையான அளவுக்கு கோவேக்சின் மற்றும் கோவிட்ஷீல்ட் அளித்து வருகின்றனர் இதை தொடர்ந்து இன்று காலை 35 ஆயிரம் தடுப்பூசிகள் கையில் வந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தால் மேலும் புதிதாக தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை 1800 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது இதில் 200 படுக்கைகள் மட்டும் பயன்படுத்தபட்டு வருகின்றனர் செங்கல்பட்டை பொருத்தவரை ஆக்சிஜன் படுக்கைகள் தட்டுப்பாடு இல்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்