திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கீழானூர் கிராம மக்கள் தர்ணா போராட்டம் :
திருவள்ளூர் ஏப் 26 : திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் கீழானூர் ஊராட்சியில் உள்ள நசரேத் கிராமம், சிட்டத்தூர் கிராமம் மற்றும் கீழானூர் கிராமம் ஆகிய அனைத்து கிராமங்களுக்கும் சுமார் இருபது வருடங்களாக குடிதண்ணீர் பிரச்சினை, ஆழ்துளை கிணறு மற்றும் சுடுகாடு மதில் சுவர் மற்றும் ஏரிமேடை மற்றும் கீழானூரிலிருந்து சிட்டத்தூருக்கு செல்லும் வழியில் சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவிற்கு மின்விளக்கு மற்றும் சிட்டத்தூர் கிராமத்தில் இருந்து பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பேருந்து வசதி இல்லை என தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் மாவட்ட நிர்வாகம் சா்ர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் பெண்கள் கையில் தண்ணீர் குடத்துடன் ஆட்சியர் வளாகம் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் டிஎஸ்பி துரைப்பாண்டியன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது 20 ஆண்டுகளாக அடிப்படை வசதிக்காக போராடி வருவதாக காவல் துறையிநருடன் வாக்கு வாதத்தில் ஈடுப்டடனர். மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து ஆட்சியரிடம் நேரடியாக கோரிக்கை மனுவை அளித்தனர். விரைந்து கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்ததையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதநால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 30 நிமிடத்திற்கும் மேலாக பரபரப்பாக காணப்பட்டது.