திருவள்ளூர் அருகே கணவர் சாவில் மர்மம் : காவல் துறை,வருவாய்த்துறையினர் முன் உடலை தோண்டி பிரேத பரிசோதனை :

Loading

திருவள்ளூர் ஏப் 26 : திருவள்ளூர் அடுத்த இராமதண்டலம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர்.இவர் கடந்த மார்ச் 29 ந் தேதி மர்மமான முறையில் தனது வீட்டில் இறந்து கிடந்தார், பின்னர் அவரது உடலை அப்பகுதியில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உங்கள் கணவரை பக்கத்து வீட்டை சேர்ந்த ரமேஷ் என்பவர் கட்டையால் தாக்கியதால் இறந்ததாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி சுதா தனது கணவர் ராஜசேகர் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது உடலை மீண்டும் தோண்டி பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து இருந்தார்.

அதன் அடிப்படையில் இராமதண்டலம் இடுகாட்டில் வட்டாட்சியர் செந்தில்குமார், டி.எஸ்.பி துரைப்பாண்டியன், புல்லரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் ஆகியோர் முன்னிலையில் சடலம் தோண்டி வெளியே எடுக்கப்பட்டது. அதையடுத்து திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை மேற்கொண்டு முக்கிய உடல் உறுப்புகளை நெகிழி பைகளில் சேகரித்து ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.

இந்த நிலையில் மருத்துவ ஆய்வு பரிசோதனை முடிவுகள் தெரியவந்தால் மட்டுமே தற்கொலையா அல்லது கொலையா என்பது தெரியவரும் என‌ காவல் துறையினர் தெரிவித்தனர்.

0Shares

Leave a Reply