திருவண்ணாமலை அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம…

Loading

திருவண்ணாமலை ஏப் 26,

திருவண்ணாமலை அருகே உள்ள நல்லவன் பாளையம் கிராமம் குளத்து மேட்டு தெருவில்
ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு நேற்றுமுன்தினம்
காலை 9 மணிக்கு மங்கல இசை ,விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம். ஸ்ரீ கணபதி ஹோமம். வாஸ்து சாந்தி. பிரவேச பலி. தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தது.
நேற்று மாலை 6 மணிக்கு. மங்கல இசை ,விக்னேஷ்வர பூஜை ,புண்யாகவாசனம் ,.யாகசாலை பிரவேசம். இரண்டாம் கால யாக பூஜை. இரவு 7 மணிக்கு. தம்பதியர்கள் பூஜை,
8 மணிக்கு. விக்கிரகங்களுக்கு யந்திரம் சாற்றுதல். அஷ்டபந்தனம் சாற்றுதல் ஆகியவை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணிக்கு. தம்பதியர்கள் பூஜை ,காலை
6.30 மணிக்கு. மூன்றாம் கால யாக பூஜை. பூர்ணாஹுதி. கடம் புறப்பாடு. மகா கும்பாபிஷேகம். மகா அபிஷேகம். மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.
இவ்விழாவில் ஒன்றிய உறுப்பினர் மண்டி ஏழுமலை,தலைவர் ரவிக்குமார்.,துணைத் தலைவர் சம்பத் ராஜ் மற்றும் முருகன். நரசிம்மன். அருண். கோவில் நிர்வாகிகள்.
விழா குழுவினர்.
ஊர் பொதுமக்கள். இளைஞர் அணி. வார வழிபாட்டு மன்றத்தினர், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கோவில் வரும் அனைத்து பக்தர்களுக்கும் இன்று காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்படுகிறது.

இந்த விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply