திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் வரும் 26 ம் தேதி முதல் 10 நாட்களுக்கு புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படாது : மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தகவல்
திருவள்ளூர் ஏப் 25 : திருவள்ளூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பாக பிரேத்யேகமாக கோவிட் மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.
இதனால் திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் சுகாதாரத்துறை செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் காரணத்தினாலும் அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் மேலும் நோய் தொற்று பரவலை கட்டுபடுத்த வரும் 26.04.2021 ந் தேதி முதல் 05.05.2021 வரை 10 நாட்களுக்கு புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படாது.
எனவே புறநோயாளிகள் அவர்கள் பகுதியின் அருகில் உள்ள மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ அல்லது கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ தங்களை பரிசோதித்து பயன்பெறுமாறும், அவசர சிகிச்சை பிரிவும், பிரசவங்களும் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா மற்றும் அரசு மருத்துமனை மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.