தலைவாசல் அருகே 150 லிட்டர் சாராயம் மதுவிலக்கு பிரிவு பறிமுதல் செய்தனர்
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சிறுவாச்சூர் உடைந்த பாலம் அருகே சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதற்காக ஆத்தூர் மதுவிலக்கு போலீசார் ரகசிய தகவல் கிடைத்தது .அதன்பேரில் ஆத்தூர் மதுவிலக்கு போலீசார் இன்ஸ்பெக்டர் வளர்மதி ,சிறப்பு இன்ஸ்பெக்டர் அண்ணாமலை , சீனிவாசன் ஆகியோர் விரைந்து சென்று சிறுவாச்சூர் உடைந்த பாலம் அருகில் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோவில் சோதனை செய்தனர். அப்பொழுது அதில் 30 மூட்டை வெல்லம் ,15 மூட்டை சர்க்கரை, 150 லிட்டர் சாராயம் ஆகியிருந்தன. இதனை தொடர்ந்து போலீசார் ஆட்டோவின் உரிமையாளர் சிறுவாச்சூர் வா.உ.சி நகரைச் சேர்ந்த சிலம்பரசன் 45 என்பவர் கைது செய்து .மேலும் சரக்கு ஆட்டோவில் 30 மூட்டை வெல்லம் 15 மூட்டை சர்க்கரை 150 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தன