Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன்

Loading

Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன் செவ்வாய்கிழமை ஏப்ரல் 20, 2021சென்னை:

பிலவ வருடம் சித்திரை 10 ஆம் தேதி ஏப்ரல் 23, 2021 வெள்ளிக்கிழமை. ஏகாதசி திதி இரவு 09.49 மணி வரை அதன் பின் துவாதசி. மகம் காலை 07.41 மணி வரை அதன் பின் பூரம். சந்திரன் இன்றைய தினம் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்றைய தினம் பூர்வ புண்ணிய ஸ்தானத்திசாதகமான நிலையில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பிள்ளைகளால் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. வீண் செலவுகளை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். படிப்பு விசயமாக புதிய முடிவுகளை எடுப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இன்று வாஸ்து பூஜை செய்யலாம்.

ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களின் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வீடு கட்ட முயற்சி செய்யலாம். கணவன் மனைவியிடையே ஏற்பட்ட சங்கடங்கள் சரியாகும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர்.

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலை விசயமாக செய்யும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் ஆசி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினை நீங்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த பிரச்சினைகள் சரியாகும்.

கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பண வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபார ரீதியான நெருக்கடிகளை சமாளிக்க கடன் வாங்குவீர்கள். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வேலை விசயமாக வெளியூர் செல்வீர்கள். செய் தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். பெண்களுக்கு உற்சாகமான நாள். வீட்டில் வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும்.

கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு 12ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வீட்டில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க தாமதமாகும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவதற்கான வாய்ப்பு உண்டாகும். திடீர் பண வருமானம் அதிகரிக்கும். உறவினர்கள் உதவியால் கடன் பிரச்சினை நீங்கும்.

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு சொத்து சேர்க்கை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சிலருக்கு வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் திருமண முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். சுக ஸ்தானத்தில் பயணம் செய்யும் குருவினால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். பணம் பல வழிகளில் இருந்தும் தேடி வரும்.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்களுயை ராசிக்கு 9ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் மன நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பணியாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் வரவிருக்கும் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு 8ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. வெளியூருக்கு வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாகவும் கவனமாகவும் செல்ல வேண்டும்.

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு 7ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.

மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு ஏற்படும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *