திருவள்ளூர் மாவட்டத்தில் தேவையான கொரோனா தொற்று தடுப்பூசி தயார் நிலையில் உள்ளது : எம்.பி., ஜெயக்குமார் தகவல்

Loading

திருவள்ளூர் ஏப் 23 : திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜெயக்குமார் திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவக் கலலூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சன் மற்றும் மருத்துவர்களுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை எம்பி ஜெயக்குமார் சந்தித்தார்.

அப்போது,கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் இந்த சூழ்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் எந்த அளவுக்கு எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம் என்பதை ஆய்வு செய்ய வந்ததாக தெரிவித்தார். மேலும் படுக்கைகளை பொருத்தவரை இந்த மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு அதிகமானாலும் அதை எதிர்கொள்ளக் கூடிய அளவுக்கு தயாராக இருப்பதாகவும். திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் மொத்தம் 350 படுகைககள் உள்ள நிலையில் தற்போது 125 படுக்கைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளதாகவும் 225 படுக்கைகள்,தேவையான கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் 8 ஆயிரம் லிட்டர் ஆக்சிஸன் இருப்பு உள்ள நிலையில் நாளொன்று 850 லிட்டர் பயன்பட்டாலும் 10 நாட்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லையும் என தெரிவித்தார். திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் உயிரிழந்ததற்கு தடுப்பூசி தான் கராணம் என ஒரு சில சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரவியதால் நாள் ஒன்றுக்கு 500 தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் தற்போது அது 200 ஆக குறைந்திருப்பதாகவும் என்னைப் பொறுத்த வரை இது பெரிய பாதகம் இல்லை என்றும் தற்காப்புக்காக இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 3419 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், மத்திய மாநில அரசுகள் பல முடிவுகளை எடுத்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அறிவித்திருப்பதால் நாம் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு இந்த உயிர்க்கொல்லி நோயை எதிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார்.

இதில் திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி ஜான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply