திருவள்ளூரில் உலக பூமி தினத்தையொட்டியும் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் நினைவாக 59 மரக்கன்றுகளை எஸ்.பி. அரவிந்தன், பிக் பாஸ் புகழ் ரம்யா பாண்டியன் ஆகியோர் நட்டனர்

Loading

திருவள்ளூர் ஏப் 23 : பூமி தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது இதனையடுத்து திரைப்பட நகைச்சுவை நடிகராக இருந்த விவேக் இயற்கை மீது மிகுந்த ஆர்வம் கொண்டு அனைவரையும் மரக்கன்று நடும் பணியை வலியுறுத்தியதோடு மட்டுமல்லாமல் அவரே நேரடியாக பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

அதற்கு பெருமை சேர்க்கும் வகையில் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலக வளாத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்று நடும் விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட எஸ்பி அரவிந்தன் மற்றும் பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு ஆயுதப்படை காவலர்கள் மூலம் 59 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

இதை தொடர்ந்து மாவட்ட எஸ்பி அரவிந்தன் கூறும்போது உலக பூமி தினத்தை முன்னிட்டும் மறைந்த திரைப்பட நடிகர் விவேக்கின் நினைவாகவும் அவரது வயதை குறிக்கும் வகையில் 59 மரக்கன்றுகள் நடப்பட்டதாகவும் மேலும் மாவட்ட காவல்துறை சார்பில் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்படும். என்று தெரிவித்தார்.

அதனையடுத்து பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியன் கூறும்போது உலக பூமி தினம் ஆண்டுதோறும் மரக்கன்றுகள் நடுவது வழக்கம் இந்த ஆண்டு நடிகர் விவேக் நினைவாகவும் அவரது இயற்கை ஆர்வத்தை போற்றும் வகையிலும் 59 மரக்கன்றுகள் இங்கு நடப்பட்டுள்ளதாகவும் கலைக்கும் கலைஞனுக்கும் அழிவு கிடையாது அதேபோல் இயற்கைக்கும் விவேக்கிற்கும் அழிவு கிடையாது. இயற்கை மீது ஆர்வம் கொண்டவர்கள் தானாக முன்வந்து மரக்கன்றுகளை நடவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

0Shares

Leave a Reply