கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றி பொது மக்களின் நன்மதிப்பை பெற்றவர் எஸ்ஐ சின்னசாமி

Loading

தர்மபுரி மாவட்டம் என்றாலே கிராம பகுதிகளை உள்ளடக்கிய மாவட்டம் இங்கு பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது.
சமீபகாலமாக கொரோனா வைரஸின் தொற்று தமிழகம் மட்டுமன்றி உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காலகட்டங்களில் மருத்துவர்கள் செவிலியர்கள் சுகாதாரத் துறை பணியாளர்கள் மட்டுமின்றி காவல்துறையின் பங்களிப்பும் எண்ணிலடங்காது. தற்பொழுது கொரோனா, இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக உள்ளதால் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் முகக் கவசம் அணியாமல் செல்வது சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அரசு விதிகளை மீறி ஆட்களை அமர வைப்பவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது மீரும் பட்சத்தில் வழக்குகள் பதியப் படுகிறது. இந்நிலையில் தர்மபுரி நகரப்பகுதியில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராக பணி புரியும் சின்னசாமி அவர்கள் விதிகளை மீறுவோர் மீது வழக்கு பதிவதோடு மட்டுமல்லாமல் மீண்டும் அவர்கள் தவறு செய்யாதவாறு அவர்களுக்கு அறிவுரை கூறி கொரோனா பாதிப்பின் விளைவுகளை எடுத்துக்கூறி இலவசமாக முகக்கவசம் வழங்குவது. கபசுரக் குடிநீர் வழங்குவது போன்ற பணிகளில் ஈடுபடுவதால் பொதுமக்களின் பாராட்டுக்களையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளார் போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் சின்னசாமி.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *