Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன்

Loading

Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன் திங்கட்கிழமை ஏப்ரல் 19, 2021சென்னை: பிலவ வருடம் சித்திரை 06ஆம் தேதி ஏப்ரல் 19, 2021 திங்கட்கிழமை. சப்தமி திதி இரவு 12.02 மணி வரை அதன் பின் அஷ்டமி. புனர்பூசம் நட்சத்திரம் முழுநாள். சந்திரன் இன்றைய தினம் மிதுன ராசியில் பயணம் செய்கிறார். விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்றைய தினம் மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிட்டும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். லாபம் பெருகும். இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும்.

ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மந்த நிலை உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உறவினர்கள் வருகையால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வேலையில் பணிச்சுமை குறையும்.

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். இன்று வியாபாரத்தில் நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். கடன் பிரச்சினை தீரும். வங்கி சேமிப்பு உயரும்.

கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் வீடு தேடி வரும்.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார விஷயமாக செல்லும் வெளியூர் பயணம் வெற்றிகரமாக முடியும்.

கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலை செய்யும் இடத்தில் வெற்றிகள் தேடி வரும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். நீங்கள் இன்றைய தினம் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றி தரும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். நினைத்த காரியம் நிறைவேறும் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். விருச்சிகம்

சந்திரன்
இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வேலையில் உடனிருப்பவர்களிடம் பேசும் பொழுது கவனமாகவும் நிதானமாகவும் பேசுவது நல்லது. இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடங்கல்கள் ஏற்படும். மன அமைதி குறையும். பணம் சம்பந்தபட்ட கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளின் உதவியுடன் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். எதிர்பாராத பணவரவுகள் மகிழ்ச்சியை தரும்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். கொடுத்த கடன்கள் வசூலாகும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று குறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும் சந்தோஷம் அதிகரிக்கும்.

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பிள்ளைகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள். உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினைகள் குறையும். இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை மந்தமாக இருக்கும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும்.

மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உற்றார் உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் விசயமாக வெளியூர் பயணம் செல்வீர்கள். வீண் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன் உண்டாகும். நண்பர்கள் வழியில் நன்மைகள் உண்டாகும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *