உயிருக்கு போராடும் பாபநாசம் பெண்மணி

Loading

கும்பகோணம் ஏப்ரல் 19:

தஞ்சாவூர் மாவட்டம் , பாபநாசம் தாலுக்கா,தென்சருக்கை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் ( வயது 50 ) , இவரது மனைவி பத்மினி (வயது 43). கடந்த 2 வருடத்திற்க்கு முன்னர் பத்மினி தன் கணவருடன் மலேசியாவில் வீட்டு வேலை செய்ய சென்றுள்ளார்.

கணவர் சந்திரசேகரன் குழந்தைகளை காண வேண்டி பாபநாசத்திற்கு மீண்டும் ஓராண்டுக்கு முன்னர் திரும்பிவிட்டார். தொடர்ந்து பத்மினி மட்டும் மலேசியாவில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் பத்மினி கடந்த டிசம்பர் 2020 , 27 ஆம் தேதி அன்று மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஜபாதன் அரசு மருத்துவ மனையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்டதால் உடலில் ஒரு பக்கம் முழுவதும் இயங்காமல் போனது.

தொடர்ந்து கோலாலம்பூர் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த பத்மினி மருத்துவ செலவுக்கு கூட பணமில்லாமல் யாருடைய உதவியுமின்றி இருந்துள்ளார். மலேசியா மதிப்பில் 15 ஆயிரம் வெள்ளி சிகிச்சை கட்டணமாக மருத்துவமனைக்கு கட்ட வேண்டி இருந்துள்ளது.

அங்குள்ள பொதுமக்கள் இவரது நிலையை அறிந்து 15 ஆயிரம் வெள்ளியை மருத்துவ மனை கட்டணமாக செலுத்தியுள்ளனர். மேலும் 2 ஆயிரம் வெள்ளி மருத்துவ கட்டணமாக கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து சில மாதங்களாக கோலாலம்ம்பூர் அரசு மருத்துவமனையிலேயே சிசிச்சைப் பெற்று வந்த பத்மினியை அங்குள்ள மருத்துவமனை மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். பின்னர் பத்மினி மலேசியாவிலிருந்து பாபநாசத்தில் இருந்த கணவரின் உதவியுடன் சொந்த ஊரான பாபநாசம் தென் சருக்கைக்கு திரும்ப முயற்சித்துள்ளார்.

அவர் தமிழ்நாட்டில் சிசிக்சை எடுக்க முடிவு செய்து அங்குள்ள ஒரு தொண்டு நிறுவனம் மூலம் விமான டிக்கெட் பெற்று ஏர் இந்தியா விமானம் மூலம் தமிழகம் திரும்ப தயாராகியுள்ளார்.

ஆனால் ஏர் இந்தியா நிறுவனம் உடலமுற்ற பத்மினியை விமானத்தில் ஏற்ற மறுத்துள்ளது.

உடலமுற்றவர்கள் விமானத்தில் பயணம் செய்ய வேண்டுமானால் ஏர் இந்தியா நிறுவனத்தின் மருத்துவரிடம் ” விமானத்தில் பயணம் செய்யலாம்” என்ற சான்று கட்டாயம் பெற வேண்டும் என ஏர் இந்தியா விமான அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் பத்மினியின் நிலைமை அறிந்த கோலாலம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பத்மினியை விமானத்தில் அழைத்துச் செல்லலாம் என்ற பரித்துரை கடித்தத்தை ஏர் இந்தியா அதிகாரிக்களுக்கு அனுப்புள்ளனர்.

தொடர்ந்து மலேசிய மருத்துவர்கள் இந்திய தூதரகத்திற்க்கு பத்மினி இந்தியா செல்ல உதவிட கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பத்மினி உடல் நலம் பாதிக்கப்பட்டு கோலம்பூர் மருத்துவ மனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட்டுள்ளார்.

தற்போது அவர் மலேசியாவின் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காப்பகத்தின் உதவியுடன் சிசிக்சைப் பெற்று வருகிறார். உற்றார் உறவினர் கணவர் மகன் மகள் என உறவினர்கள் பத்மினியை காண செந்த ஊரான பாபநாசத்தில் தவித்து வருகின்றனர். அதே வேளையில் உணவுக்கு கூட வழியில்லாமல் காப்பகத்தின் உதவியில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் பத்மினி. இந்த இக்கட்டான சூழ் நிலையில் பத்மினியை தமிழகம் கொண்டு வர இந்திய அரசும், தமிழக அரசும் , தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரும் உதவிட வேண்டுமென பத்மினியின் கணவர் சந்திரசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்துள்ளன

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *