பழனியில் நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது…
![]()
யில் கொரனோ தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்களும் வியாபாரிகளும் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர். மேலும் நகர்புற பகுதிகளில் தொடர்ந்து தொற்று விகிதம் அனைத்து பகுதிகளிலும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.எனவே பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக அடிவாரம் பகுதியில் உள்ள பாத விநாயகர் கோயில் முன்பு மாவட்ட துணைத்தலைவர்
ஜே.பி. சரவணன் கண்பத் ஹோட்டல் உரிமையாளர்
ஹரிஹரமுத்து ஆகியோர் தலைமையில் அரிசி கடை வியாபாரிகள் சங்கம், சரவணபொய்கை வியாபாரிகள் சங்கம், பாத்திரக்கடை உரிமையாளர்கள் சங்கம்,
மார்க்கெட் வியாபாரிகள் சங்கம், பேருந்து நிலைய உள்ளிருப்பு கடைவியபாரிகள் சங்கம்,
நகர தங்கும் விடுதி உரிமையாளர்கள் நலச்சங்கம், ஒருங்கிணைந்த வர்த்தகர்கள் சங்கம், செருப்பு கடை வியாபாரிகள் சங்கம், பர்னிச்சர் கடை வியாபாரிகள் சங்கம், பிளைவுட் கடை வியாபாரிகள் சங்கம், மொபைல் கடை உரிமையாளர்கள் சங்கம்,
டீக்கடை உரிமையாளர்கள் சங்கம்,
துணிக்கடை உரிமையாளர்கள் சங்கம், உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக கொரனா பற்றிய விழிப்புணர்வு கருத்துக்களை
பொது மக்களுக்கும் வியபாரிகளுக்கும் தெரிவித்தவாறு பேரணியாக சென்றனர். மேலும் இந்தப் பேரணியில் முகப்பு வாயிலில் எமதர்மராஜா வேடம் அணிந்தும் கொரனாவை விளக்கும் வகையிலும் வேடமணிந்து வியாபாரிகள் ஊர்வலமாக சென்றனர். தேரடி என்ற இடத்தில் பேரணி முடிவுற்ற நிலையில் வியாபாரிகள் கொரனா விழிப்புணர்வுக் கருத்துகளை எடுத்துக்கூறி நிறைவு செய்தனர்.மேலும் அனைவருக்கும் கேக்,மற்றும் தேநீர் வழங்கப்பட்டனர்…
