திருவள்ளூரில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வட்டாரப் போக்குவரத்து காவல் துறை சார்பில் கொரோனா தொற்று விழிப்புணர்வு :

Loading

திருவள்ளூர் ஏப் 19 : மாவட்ட தலைநகரான திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டான்டிலிருந்து 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. ரயில் நிலையத்திலிருந்து ஆட்சியர் அலுவலகம், எஸ்பி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், பஜார் வீதி, வீரராகவர் கோயில் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும் பேருந்து நிலையம் போன்ற பகுதிகளுக்கு பெரும்பாலானோர் ஆட்டோவிலேயே பயணிக்கின்றனர்.

இந்நிலையில் தொற்று 2-வது அலை காரணமாக கூட்ட நெரிசலை தவிரிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஆட்டோவில் 2 நபர்களை ஏற்ற வேண்டும்,கட்டாயம் முக கவசம் அணிபவர்களை ஆட்டோவில் ஏற்ற வேண்டும், ஓட்டுனரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

அதன்படி திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து காவல் துறை சார்பில் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் ரவிக்குமார் ஆகியோர் திருவள்ளூர் ரயில் நிலைய ஆட்டோ ஓட்டுனர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். கணவன் மனைவி மற்றும் கை குழுந்தை இருந்தால் மட்டுமே ஏற்றலாம். 2 பேருக்கு மேல் பயணிகளை ஏற்றினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் எச்சரித்தார்.

மேலும் ஆட்டோ உரிமம், ஓட்டுனர் உரிமம் மற்றும் காப்பீடு செய்ததற்கான சான்றிதழ் ஆகியவற்றையும் ஆய்வு செய்ததுடன் சான்றிதழ்கள் இல்லாதவர்களையும் உடனடியாக சமர்ப்பிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
============================================================

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *