கேஸ் ஏற்றிவந்த கண்டைனர் லாரி மினிவேனை இடித்துத்தள்ளி கடைக்குள் புகுந்ததில் ஒருவர் படுகாயம் :
திருவள்ளூர் ஏப் 19 : திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ்(26), குட்டி யானை என்ற மினி வேனை வண்டியை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சென்னை செங்குன்றத்தில் இருந்து திருத்தணி நோக்கி வந்த சுமார் 45 ஆயிரம் கிலோ எரிவாயுவை (ப்ரோபேன் கேஸ் ) ஏற்றிவந்த டேங்கர் லாரி ஈக்காடு அருகே வரும்போது கட்டுப்பாட்டை இழந்து வெடிங் கடையில் புகுந்தது,
கடைக்கு அருகே பொருட்கள் ஏற்றுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குட்டி யானை மீது மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் ஈக்காடு பகுதியை சேர்ந்த பால்ராஜ் பலத்த காயமடைந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மேலும் கேஸ் வண்டியை ஓட்டி வந்த லாரியின் டிரைவர் திருச்சியை சேர்ந்த கோபிநாத் லேசான காயமடைந்தார். கொளுத்தும் வெயிலில் எரிவாயு ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது மோதியதுடன் கடைக்குள் புகுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த புல்லரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.