சுடுகாட்டில் ஆக்கிரமிப்பு செய்துள்ள தனியாரை கண்டித்து குடியாத்தம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

Loading

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கிராமத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு உள்ள சுடுகாட்டில் தனியார் ஒருவரால் நிலத்தின் ஒருபகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அடக்கம் செய்வதற்காக சுடுகாட்டிற்கு செல்லும்போதெல்லாம் பொதுமக்களை ஆபாசமாக திட்டுவதும் மிரட்டல் விடுவதுமாக தனியார் ஈடுபட்டதால் இதனை கண்டித்து சுடுகாட்டில் உடனடியாக ஆக்கிரமிப்பை அரசு அதிகாரிகள் அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து நேற்று மாலை இவ்வூர் பொதுமக்கள் குடியாத்தம் பரதராமி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வருவாய்த் துறையினர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த வாக்குறுதியை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. 30 நிமிடம் நடைபெற்ற இச் சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

0Shares

Leave a Reply