ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி. அலாரம் ஒலித்ததால் பல லட்சம் ரூபாய் தப்பியது.

Loading

ஈரோடு ஆசிரியர் காலனியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் நேற்று அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் ஏ.டி.எம் எந்திரத்தில் உள்ள பணத்தை கொள்ளை அடிப்பதற்காக ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தனர்.

அப்போது ஏ.டி.எம். மையத்தில் உள்ள அலாரம் திடீரென ஒலித்தது. இதனால் பயந்துபோன கொள்ளையர்கள் மாட்டி விடுவோம் என நினைத்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.

கண்காணிப்பு கேமரா அலாரம் ஒலித்ததால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் ஏ.டி.எம் மையத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி வங்கி மேலாளருக்கும், சூரம்பட்டி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

0Shares

Leave a Reply