Today’s Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்

Loading

சென்னை: சார்வரி வருடம் பங்குனி 23ஆம் தேதி ஏப்ரல் 05, 2021 திங்கட்கிழமை. நவமி திதி இரவு 02.19 மணிவரை அதன் பின் தசமி. உத்திராடம் நட்சத்திரம் இரவு 02.05 மணி வரை அதன் பின் திருவோணம். சந்திரன் இன்றைய தினம் மகர ராசியில் பயணம் செய்கிறார். மிதுன ராசியில் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. சந்திரன் ஆதிக்கம் நிறைந்த இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் யாருக்கும் பணம் வரும் யாருக்கு திடீர் செலவு வரும் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம் – செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே இன்றைய தினம் சந்திரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். லாப ஸ்தானத்தில் குரு பயணம் செய்யப்போவதால் நிறைய லாபங்கள் நிறைந்த நாளாக அமையப்போகிறது. செல்வ வளம் பெருகும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் வரும். வேலையில் மாற்றம் பற்றிய தகவல். பெண்களுக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். இன்றைய தினம் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அமையப்போகிறது. இன்று குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். புதிய பொருள் வீடு வந்து சேரும்.

ரிஷபம் – சந்திரன் எட்டாம் வீட்டில் இருந்து ஒன்பதாம் வீட்டிற்கு பயணம் செல்கிறார். உங்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக இருந்த சங்கடங்கள் நீங்கும். இன்றைக்கு உற்சாகமான நாளாக அமையப்போகிறது. இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் காலதாமதமாகும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு கூடும்.

மிதுனம் – சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பண முதலீடுகளில் கவனம் தேவை. குருவின் பயணம் உங்களுக்கு சாதகமாக இருந்தாலும் சந்திராஷ்டமம் இருப்பதால் இன்றைய தினம் உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். செய்யும் செயல்களில் நிதானம் தேவை. பேச்சில் நிதானம் தேவை. இன்றைய தினம் சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். பயணங்களில் கவனம் தேவை.வாகன போக்குவரத்தில் கவனம் தேவை.

கடகம் – சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு இருந்த பொருளாதார நெருக்கடிகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். பெரியோர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

சிம்மம் – சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். திடீர் பண வரவு வரும் குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

கன்னி – சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பிள்ளைகளால் சில சங்கடமான சம்பவங்கள் நடைபெறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள். உங்களுக்கு சுபசெய்திகள் தேடி வரும். சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்க உணவு விஷயத்தில் கவனம் தேவை. ஆடம்பர பொருட்களால் செலவுகள் அதிகமாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

துலாம் – சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். சுப காரியங்கள் நடைபெறும். தேவையற்ற பேச்சுக்களை குறைத்துக் கொண்டால் குடும்பத்தில் அமைதி நிலவும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

விருச்சிகம் – சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வேலை விசயமாக செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் சம்பந்தமான சுபகாரியங்களில் வெற்றி கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.

தனுசு – சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். இன்று வீட்டில் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

மகரம் – சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்குள் பயணம் செய்கிறார். குரு உங்களுடைய ராசியில் இருந்து இடப்பெயர்ச்சி அடைகிறார். இரண்டாம் வீட்டிற்கு குரு செல்வதால் உங்களுடைய பொருளாதார சிக்கல்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நிதி நெருக்கடிகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகளில் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.

கும்பம் – சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும் காரமான உணவுகளை சாப்பிட வேண்டாம் தவிர்த்து விடவும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். வேலை விசயமாக செல்லும் வெளியூர் பயணம் வெற்றிகரமாக முடிவுக்கு வரும்.

மீனம் – சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிககும். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும். வராத கடன்பாக்கிகள் வசூலாகும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *