பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார்.
பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ. தி.மு.க.வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரனை ஆதரித்து பண்ருட்டியில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது. நான் சொல்வதை போன்று நம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு நல்ல வேட்பாளர் கிடைத்திருக்கிறார். வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன். விவசாயி உங்களுக்கு நன்கு அறிமுகமானவர். எதிரணி கூட்டணியில் உள்ள வேட்பாளர் பற்றி நான் உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இங்கு தி .மு. க. கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் எப்படிப் பட்ட வர் என்பது பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும் அவரது பெயரை நான் சொல்ல மாட்டேன். நான் இதுவரைக்கும் ரொம்ப நாகரீகமான அரசியல் வாழ்க்கை வாழ்ந்தவன். நாகரீகமாக தான் பேசுவேன். யாரை பற்றியும் தவறாக பேச மாட்டேன். யாரை பற்றியும் ஒருமையில் கூட பேச மாட்டேன். ஆனால் இன்று பேசுகின்ற அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த தொகுதியை பொறுத்தவரையில் யார் வரவேண்டும். அதை விட யார் வரக்கூடாது என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இங்கு உள்ள வியாபாரிகளிடம் தான் கேட்கிறேன். உங்கள் வியாபாரம் நன்றாக நடக்க. உங்கள் வீட்டு பெண்கள் எல்லோரும் நிம்மதியாக இருக்க. இந்த நகரம் நன்றாக வளர வேண்டும் என்றால் சொரத்தூர் ராஜேந்திரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். தப்பி தவறி கூட நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்தால் அவ்வளவு தான். உங்கள் அமைதி எல்லாம் போய் விடும். இந்த நகரம் மட்டுமல்ல இந்த தொகுதியின் ஒட்டு மொத்த வளர்ச்சியும் போய் விடும். அதனால் தான் மீண்டும் மீண்டும் நான் எச்சரிக்கிறேன். நான் உங்களுக்காகத் தான் அரசியலூக்கு வந்தேன். உங்களுக்கு சேவை செய்ய வே வந்தேன். அரசியல் என்பது புனிதமான சேவை அதுக்குத்தான் நாங்கள் வந்து இருக்கிறோம். அனைவரும் நன்றாக பழக்னும். என்னுடைய நோக்கம் என் தம்பிகள் மீது ஒரு வழக்கு உட பதியக்கூடாது. எல்லோரும் படித்து வேலைக்கு செல்ல வேண்டும், வள்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை டாக்டர் ராமதாஸ் பெற்றுத் தந்து இருக்கிறார், உங்கள் மீது ஏதேனும் வழக்கு பதிவு செய்யப்பட்டால் அரசு பணியில் சேர முடியாது இந்த மாவட்டம் அமைதியாக இருக்க வேண்டும். வளர்ச்சி பெற வேண்டும். நீங்கள் நன்றாக இருக்க வேண்டும். உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். எனவே நமது வேட்பாயார் சொரத்தூர் ராஜேந்திரனுக்கு. இரட்டை .இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.