நூறு சதவிகித வாக்குப்பதிவினை வலியுறுத்தி பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு..
![]()
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2021 நடைபெறவுள்ளதையொட்டி, தேனி மாவட்டத்தில், வாக்காளர்கள் நூறு சதவிகித வாக்குப்பதிவினை வலியுறுத்தி பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தில், வாக்காளர் விழிப்புணர்வு அஞ்சல் வில்லையினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஹெச்.கிருஷ்ணனுண்ணரி, அவர்கள் வெளியிட மாவட்ட காவல் கண்காணிபாளர் திரு. இ.சாய் சரண் தேஜஸ்வி அவர்கள் பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)
இரா.இராஜா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஞ.தாக்ரே சுபம், முதன்மைக்கல்வி அலுவலர் சுபாஷினி உட்பட பலர் உள்ளனர்
