முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் தி.நகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்
தேசிய ஜனநாயக கூட்டணியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களான தியாகராய நகர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தி.நகர் பி.சத்தியா அவர்கள் “இரட்டை இலை” சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அஇஅதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் தி.நகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் அஇஅதிமுகவின் 4 ஆண்டடு செய்த சாதனைகளையும் பல்வேறு நலத்திட்டங்களையும் செய்துள்ளதாகக் கூறினார். தேர்தல் அறிக்கையாக அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 6, சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்றும். ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதந்தோறும் ரூபாய் 1500. குடும்ப அட்டைதாரர்களுக்கு வாஷிங் மெஷின்.பெண்களுக்கு பேறுகால விடுமுறை 10, மாதங்களாக உயர்த்தப்படும் என்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஆண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க 20% மானியம். திருமண நிதி உதவி பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு 30,000 மாற்றம் 6 கிராம் தங்கம். பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு ரூபாய் 60,000 மற்றும் 10 கிராம் தங்கம். இதுபோன்ற. பல்வேறு திட்டங்களையும் அறிவித்தார். இந்நிகழ்ச்சியில் தி.நகர் பகுதி செயலாளர்.மு. உதயா. மற்றும் வட்டச் செயலாளர்களும் பொறுப்பாளர்களும். பாரதிய ஜனதா கட்சியின். மாவட்டச் செயலாளர்களும் வட்டச்செயலாளர்களும் பொறுப்பாளர்களும் பாட்டாளி மக்கள் கட்சியின்.பகுதி செயலாளர்களும்.வட்ட செயலாளர்களும். பொறுப்பாளர்களும். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வட்ட செயலாளர்களும். பொறுப்பாளர்களும். கூட்டணிக் கட்சியின் தொண்டர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.