சுப்பிரமணியன் அறக்கட்டளை மற்றும் சுபம் இலவச வேலை வாய்ப்பு பயிற்சி மையத்திற்கு சிறந்த சேவைக்கானவிருது வழங்கப்பட்டது.

Loading

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மஞ்சூர் கிராமத்தில் சுப்ரமணியன் அறக்கட்டளை மற்றும் சுபம் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி மையம்கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.இம்மையத்தின் முக்கிய நோக்கம் ஏழை எளிய மிகவும் பின்தங்கிய மாணவ மாணவியர்களுக்கு இலவச கல்வி .டிஎன்பிசி -காவல்துறை,ஆசிரியர் உள்ளிட்ட பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது .மேலும் தொலைதூரத்திலிருந்து கல்வி கற்க வரும் மாணவ மாணவியருக்கு இலவச தங்கும் இடமும் அளித்து வருகின்றனர்இவர்களின் சேவையை அறிந்து அக்கிராம மக்கள் அறக்கட்டளைக்கு இலவசமாகஇலவசமாக இடத்தை வழங்கியுள்ளனர்..இந்நிறுவனத்தில் வெற்றி பெற்று பல்வேறு அரசு பதவிகளில் பணியாற்றி வருகின்றனர் அவ்வாறு ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர்களாக இருக்கும் பலர் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்குவது சிறப்பு அம்சமாகும்.மேலும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற காவலர் எழுத்துத் தேர்வில் இந்த அறக்கட்டளையில் பயிற்சி பெற்ற 48 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இது மேலும் அந்த அறக்கட்டளையின் சிறப்பை வெளிப்படுத்துவதாகும்.அறக்கட்டளையின் நிறுவனர் முன்னாள் மாவட்ட பதிவாளர் எஸ் பாலு அவர்கள் வழி நடத்தி வருகிறார் பக்கபலமாக ஒருங்கிணைப்பாளர் செல்வேந்திரன் அறக்கட்டளையை நிர்வகித்து வருகிறார்.யோ நிறுவனத்தின் சேவையை பாராட்டி சென்னை ரேடியன் ரோட்டரி கிளப் சிறந்த சேவைக்கான விருதினை சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் செல்வேந்திரன் அவர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்தனர் நிகழ்ச்சியில் நிறுவனர் எஸ் பாலு.திரைப்பட இசையமைப்பாளர் இயக்குநர் மற்றும் பாடலாசிரியர் கங்கை அமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *