ஊழலற்ற நேர்மையான நல்லாட்சி அமைந்திட நல்லோரே சிந்தித்து வாக்களிப்பீர் ! “வணக்கம் வள்ளுவம்” பரப்புரைப் பயணம்

Loading

“தமிழகம் தன்னிறைவு பெற வேண்டும்
இந்திய திருநாடு வலிமை பெற வேண்டும் மனிதகுலம் மன அமைதியுடன்
மகிழ்வாய் வாழ வேண்டும் ”
இவைகளை நடைமுறைப்படுத்திட தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற வழி காணவேண்டும்!

“நல்லாட்சி, நல்லவர் ஆட்சி ,ஊழலற்ற நேர்மையான ஆட்சி அமைந்திட நல்லோரே சிந்தித்து வாக்களிப்பீர் ”
என்கிற பரப்புரையைவலியுறுத்தி சென்னை திருவொற்றியூர் சமூக சேவை சங்கத்தினரின் “வணக்கம் வள்ளுவம் ” எனும் அமைப்பு தமிழகம் தழுவிய பயணத்தை மேற்கொண்டது.

வணக்கம் வள்ளுவம் அமைப்பைச் சார்ந்த சான்றோர் சந்திரகுமார் தம்பதியர் , சமூக சேவை சங்கத்தின் கோட்டீஸ்வரன் ,விக்ரம் ,விக்னேஷ்
ஜெயக்குமார் , சுதந்திர போராட்ட வீரரும் தியாகியுமான மதுராந்தகம் ஸ்ரீராமுலு , ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தங்கம் ,தமிழ் ஆசிரியர் புலவர் வாவாசி , இதழாளர் இசைக்கும்மணி மற்றும் செயல்பாட்டாளர்கள் கலந்துகொண்ட பரப்புரை வாகனப்பயணம் திருவொற்றியூர்
இராமலிங்க சுவாமிகள் மடம் மற்றும் பட்டினத்தார் நினைவிடத் திலிருந்து தொடங்கியது.

சென்னையின் பிரதான பகுதியாகிய பாரிமுனை கடந்து , மெரினா கடற்கரை காந்தி சிலை முன்பு மலரஞ்சலி செலுத்தி பரப்புரைத்த பின் , மயிலை வள்ளுவர் கோவில் வளாகத்தருகே வணங்கி, பரப்புரை பிரசுரங்களை விநியோகித்தனர்.

உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு உயிர் நீராம் மழைநீர் தேவைப்படுவது போல, ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சிதேவையான
தாகும் என பொருள்படும்,

“வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி”

என்னும் பொருட்பால் அரசியல் பகுதி செங்கோண்மை அதிகாரத்தில் உள்ள குறட்பாக்களை எல்லாம் நல் சாந்தகுமார் தம்பதியினர் முற்றோதினர்.

சென்னையின் நுழைவு வாயிலான தாம்பரம், செங்கல்பட்டு , மதுராந்தகம் பகுதிகளில் பரப்புரைத்து, திண்டிவனம் நெடுஞ்சாலை வழி வடலூர் அடைந்து, இராமலிங்க சுவாமிகளின் சத்திய ஞான சபை வளாகத்தில் பரபரப்புரை பிரசுரங்களை வினியோகித்து , மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் ஊரண் அடிகளார் , வைத்தியர் இராமச்சந்திரன் ஆகியோரது ஆதரவு பெற்று பரப்புரைத்து, மதுரையை நோக்கி பயணம் தொடர்ந்தது.

திருச்சி திண்டுக்கல் பகுதிகளில் பரப்புரைத்து மதுரை மூதூரை அடைந்து, காந்தி அருங்காட்சியக வளாகத்தில் தங்கி ஓய்வெடுத்த பின் , அடுத்த நாள் பயணத்தை தொடங்கினர், வணக்கம் வள்ளுவம் அமைப்பினர்.

மதுரையிலிருந்து புறப்பட்டு கக்கனின் பிறந்த ஊரான மேலூர் தும்பைப்பட்டியில் உள்ள கக்கன் மணிமண்டபத்தை அடைந்தனர் .எளிமைக்கும் தூய அரசியலுக்கு முன்னோடியாக திகந்திருந்த கக்கனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, பிரசுரங்களை விநியோகித்தனர். கக்கன் பிறந்து வளர்ந்த நினைவில்லத்திற்கும் சென்று மரியாதை செலுத்தினர். திரு.பூபதி கக்கன் அனைவரையும் வரவேற்று உபசரித்து பரப்புரைப் பயணத்தைவாழ்த்திவழியனுப்பினார்.

கன்னியாகுமரியை நோக்கிய பயண வழியில் விருதுநகர் வந்தடைந்து , கர்மவீரர் காமராஜர் இல்லம் வணங்கி , அவரது சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி நெல்லை வழியாக கன்னியாகுமரி வந்தடைந்து, நாகர்கோவில்உள்ளஜீவானந்தத்தின் புதுப்பிக்கப்பட்ட நினைவு இல்லம் மற்றும் அவரது மணிமண்டபம் வணங்கி, பேராசான் ஜீவாவின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். ஜீவாவோடு பழகிய பழஞ்சியா பிள்ளை பயணத்தை வாழ்த்தி பேசினார். செய்தியாளர் நாகர்கோவில் ஜார்ஜ் குமரி பயண வழிகளை நெறிப்படுத்தினார்.

“மது உற்பத்தியை அனுமதிக்காத
மது வணிகத்தை செய்யாத,
மக்கள் வரி பணத்தை கொள்ளையடிக்காத, குடிமக்களின் சாதி மதம் பேதம் காணாத, எளிமையாக அரசியலுக்கு வந்து
தவறான வழிகளில் வலுவான வாழ்வை பெற்று வன்கொடுமைகளை நிகழ்த்தாத,
இயற்கை வளங்களை எல்லாம் சீரழிக்காத,
மொழி, மதம்,கலாச்சாரத்தை
மறைமுகமாக. திணிக்காத,
சிறுபான்மை பெரும்பான்மையினரின் உரிமைகளில் ஆதிக்கம் செலுத்தாத,
நல்லாட்சியை , நல்லவர்கள் ஆட்சியை, ஊழலற்ற நேர்மையான ஆட்சியை தருபவர்களுக்கே சிந்தித்து வாக்களிக்க வேண்டும்! ”

எளிமை நேர்மை அரசியல் தூய்மைக்குஎடுத்துக்
காட்டாக வாழ்ந்து மறைந்த ஓமந்தூர் இராமசாமி ராஜாஜி ,காமராஜர், கக்கன், ஜீவானந்தம் ,அறிஞர் அண்ணா போன்ற அரசியல்வாதிகளை அடையாளம் காண்பித்த வாக்காளர்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் நல்லவர்களை நல்லாட்சியை தருபவர்களையே தேர்வு செய்து வாக்களிக்க வேண்டும் என்பதை பரப்புரைத்து அது குறித்த பரப்புரை பிரசுரங்களை சென்னை முதல் குமரி வரை விநியோகித்து, பரப்புரை பயணத்தை முடித்துக்கொண்டு, வணக்கம் வள்ளுவர் அமைப்பினர் சென்னை திரும்பினர்.

“ஒவ்வொருடைய எதிர்காலமும் இன்றைய நற்செயல்களை சார்ந்தே இருக்கிறது ”

எனவே நாட்டின் நல் எதிர்காலத்தை தீர்மானிக்கிற ஜனநாயக கடமையான வாக்களிப்பு உரிமையை சுதந்திரமாகவும் சிந்தித்தும் செயல்படுத்திட வேண்டும் என்பதே தமிழகம் தழுவிய இந்த பரப்புரைப் பயணத்தின் நோக்கமாகும்.
” வாழும் வள்ளுவத்தை வணங்கி உயர்த்தி பிடித்திடுவோம் ” என வணக்கம் வள்ளுவம்
அமைப்பின் நெறியாளர் கோட்டீஸ்வரன் பயண முடிவில் தெரிவித்தார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *