கெங்கவல்லிதேர்தல் பிரச்சாரத்தில் தி. மு. க வேட்பாளர் உறுதி .

Loading

சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதி திமுக வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினியை ஆதரித்து.
அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைவாசல் மும்மூடி பேருந்து நிறுத்தம் முதல் ஆறகலூர் பிரிவு சாலை வரை நடந்து சென்று மக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
தலைவாசல் பகுதி மக்கள் தெரிவித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கைகளின் நிறைவேற்றப்படும் என ஸ்டாலின் உறுதி அளித்தனர்

மேலும் தொடர்ந்து பெரியேரி ஆரகலூர் தியாகனூர் ஆர்த்தி அகரம் சித்தேரி கோவிந்தம் பாளையம் வேப்பம்பூண்டி புளியங்குறிச்சி எடப்பாடி வெள்ளையூர் இலுப்பநத்தம் ஆகிய ஊராட்சிகளில் வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினி ஓட்டு சேகரித்தார்.

மேலும் தலைவாசல் தனி தாலுகாவாக பிரிக்கப்பட்டு உள்ளதால் புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும். தினசரி காய்கறி மார்க்கெட் விரிவுபடுத்தி குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும் கெங்கவல்லி தலைமையிடமாக வைத்து மில்க் கோட்ட அலுவலகம் கொண்டுவரப்படும் இப்பகுதி மக்களின் கோரிக்கையின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.

இதில் தி.மு.க சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ் .ஆர் . சிவலிங்கம் கெங்கவல்லி தொகுதி பொறுப்பாளர் கோபால் , தலைவாசல் ஒன்றிய செயலாளர் மணி ,விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் நடேசன் , முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன் ,
காங்கிரஸ், ம.தி.மு.க, வி சி , கொ.ம.தே.க நிர்வாகிகள் தொண்டர்கள் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்கு சேகரித்தனர்.

0Shares

Leave a Reply