நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் திரு. கப்பச்சிவினோத் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு …
நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் திரு. கப்பச்சிவினோத் அவர்கள் கண்டோன்மென்ட் 2வது வார்டு பகுதிக்கு உட்பட்ட ஜெயந்திநகர் பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு அதிமுக ஆட்சியின் கடந்த 5 ஆண்டுகள் ஆட்சியில் பொது மக்களுக்கு வழங்கபட்ட நலத்திட்டங்கள் சாதனைகள் குறித்து விளக்கினார் .இந்த தேர்தல் பிரச்சாரத்தில் குன்னூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. சாந்திராமு அவர்கள் வெலிங்டன் கண்டோண்மென்ட் போர்டு முன்னாள் 2வது வார்டு கவுன்சிலர் மற்றும் வெலிங்டன் அம்மா பேரவை நகரிய செயலாளருமான திரு.சிவக்குமார் அவர்கள் திரு.துரைராஜ் அவர்கள் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கழக உறுப்பினர்கள் மற்றும் ஜெயந்திநகர் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.