Today’s Rasi Palan: இன்றைய ராசிபலன்கள் – மார்ச் 24, 2021

Loading

சென்னை: சார்வரி வருடம் பங்குனி 11 ஆம் தேதி மார்ச் 24, 2021 புதன்கிழமை. தசமி திதி பகல் 10.24 மணிவரை அதன் பின் ஏகாதசி திதி.பூசம் இரவு 11.12 மணிவரை அதன் பின் உத்திராடம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் கடக ராசியில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம் – சந்திரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவார்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடி வரும்.

ரிஷபம் – சந்திரன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுப செலவுகள் ஏற்படும். திருமண முயற்சிகளில் இருந்த மந்த நிலை நீங்கி நன்மைகள் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வங்கி சேமிப்பு உயரும். அதீத பண வரவினால் சுப செலவுகள் அதிகமாகும். தர்ம காரியங்கள் செய்வீர்கள்.

மிதுனம் – சந்திரன் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் உற்சாகம் அதிகரிக்கும். சின்னச் சின்ன சண்டைகள் வந்தாலும் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் உறுதுனையாக இருப்பார்கள்.

கடகம் – உங்களுடைய ராசிநாதன் சந்திரன் உங்களுடைய ராசிக்குள் இன்று பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

சிம்மம் – சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் சுப விரைய செலவுகள் ஏற்படும். இன்று குடும்பத்தில் அமைதி குறையும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கலாம். பெரியோர்களின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை கொடுக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் லாபம் கிட்டும்.

கன்னி – சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்கள் மூலம் அனுகூலப்பலன் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.

துலாம் – சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அதிகரிக்கும், பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள், பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வேலையில் புரமோசன் கிடைக்கும். சம்பள உயர்வு அதிகமாகும்.

விருச்சிகம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பெரியவர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படும். இன்றைய தினம் நீங்கள் தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலை விசயத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். வேலையில் எதிரிகளால் ஏற்படும் பிரச்சினைகள் நீங்கும். பணவரவு நன்றாக இருக்கும்

தனுசு – சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்ய நினைக்கும் காரியங்களில் காலதாமதம் உண்டாகும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

மகரம் – சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். பொருளாதாரம் நன்றாக இருக்கும்.

கும்பம் – சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்சியை கொடுக்கும். நவீன பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.

மீனம் -சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த ஒரு காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். வீண் செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டியிருக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உறவினர்கள் ஆதரவு மனதில் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அதிகரிக்கும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *