காவல் துணை கண்காணிப்பாளர் கணேசன் அவர்கள் முன்பு நேரடியாக சென்று ஒரு ஸ்மார்ட் போன் வழங்கி, சிறு உதவியும் செய்தார்.
கன்னியாகுமரி :- கடந்த வருடம் வறுமையின் காரணமாக குடும்பத்தோடு 3 பெண்கள் தற்கொலை செய்து கொண்ட போது அதில் ஒரு பெண் மட்டும் காப்பாற்றபட்டார். யாரும் இல்லாத நிலையில் அந்த பெண்ணுக்கு உதவும் நோக்கத்தில் மாவட்ட குற்ற பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் கணேசன் அவர்கள் முன்பு நேரடியாக சென்று ஒரு ஸ்மார்ட் போன் வழங்கி, சிறு உதவியும் செய்தார். தற்போது அந்த பெண் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு கொண்டிருந்தார். உடனே காவல் துணை கண்காணிப்பாளர் ஏற்பாட்டின் பேரில் ஜெயசேகரன் மருத்துவமனை எலும்பியல் துறை தலைவர் Dr. சரவணன் மற்றும் சரவணா பார்மாசியூட்டிக்கல்ஸ் உரிமையாளர் ஹரியும் இணைந்து பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு தேவையான அனைத்து மருத்துவ பொருட்களை வழங்கினர். இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்…