பேர்ணாம்பட்டு இஸ்லாமிய மேல் நிலைப்பள்ளி NSS, NCC , மாணவர்கள் முலமாக 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி .

Loading

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளி NSS NCC மாணவர்கள் மூலமாக நடைபெறுகின்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீத வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்த பேரணியானது மரித் ஹாஜி முஹம்மது இஸ்மாயில் கல்லூரி தாளாளர் ஜனாப் ஹாஜி மரித் ஜஹுர் அஹ்மத் சாஹெப் அவர்கள் தலைமை தாங்கினார். மற்றும்
இஸ்லாமிய மேல் நிலைப் பள்ளி தாளாளர் ஜனாப் ஹாஜி மரித் நிஸார் அஹ்மத் , பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் கோபி , பேர்ணாம்பட்டு காவல்துறை ஆய்வாளர் வேங்கடேசன் , பேர்ணாம்பட்டு நகராட்சி ஆணையாளர் தாமோதரன், பேர்ணாம்பட்டு இஸ்லாமிய மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஹிமாயுன் பாஷா , பேர்ணாம்பட்டு வருவாய் துறை ஆய்வாளர், பேர்ணாம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் முன்னிலை வகித்தனர்.
குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷேக் மன்சூர் மற்றும் வேலூர் மாவட்ட நுகர்வோர் நலன் பாதுகாப்பு சங்க தலைவர் பஷிருத்தின் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
இஸ்லாமிய மேல் நிலைப் பள்ளி NSS , NCC மாணவர்கள் கைபாதகையுடன் ஊர்வலமாக சென்று 💯/- வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இதில் பேர்ணாம்பட்டு அனைத்து வனிகர் சங்க தலைவர் ஆலியார் அமின் அஹ்மத், பேர்ணாம்பட்டு வருவாய்துறை , காவல்துறை, பேர்ணாம்பட்டு நகராட்சி அலூவலர்கள் மற்றும் பேர்ணாம்பட்டு இஸ்லாமிய மேல்நிலை பள்ளி அலூவலர் அம்ஜத் பாஷா மற்றும் ஆசிரியர்கள் முஹம்மது அலி , இர்ஷாத் அஹ்மத் , ஷோயிப் அஹ்மத் , ஜபிர் அஹ்மத், சத்திய முர்த்திஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி எற்பாடுகளை பேர்ணாம்பட்டு சமூக ஆர்வலர்கள் இம்ரான் மற்றும் டி. ஜுனேத் அஹ்மத் ஆகியோர் செய்து இருந்தனர்.
Attachments area

0Shares

Leave a Reply